எப்போ ‘வெள்ளை மாளிகையை’ விட்டு வெளியேறுவீங்க..? அவங்க மட்டும் ‘அத’ சொல்லட்டும் உடனே போய்டுவேன்.. முதல்முறையாக வாய் திறந்த டிரம்ப்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வெள்ளை மாளிகையை விட்டு எப்போது வெளியேறுவேன் என டொனல்ட் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட நடப்பு அதிபரான டொனால்டு டிரம்ப், ஜோ பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

இந்தநிலையில், அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின் முதல்முறையாக செய்தியாளர்களை டிரம்ப் சந்தித்தார். அப்போது ஜோ பைடன் அதிபர் என எலக்டோரல் காலேஜ் சான்றளித்து விட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா? என நிருபர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டிரம்ப், ‘நிச்சயம் நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்.  அது உங்களுக்கும் தெரியும். ஆனால் வருகிற ஜனவரி 20ம் தேதி வரை பல்வேறு விசயங்கள் நடைபெறும் என நான் நினைக்கிறேன். பெரிய அளவில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு உள்ளன’ என பதிலளித்தார்.

அமெரிக்காவில் எலக்டோரல் காலேஜ் என்பது அதிபரை தேர்வு செய்ய கூடிய தேர்வாளர்களை கொண்ட ஒரு குழு. இந்த குழுவினர் அளிக்கும் ஓட்டுகளுக்கு ஏற்ப பெரும்பான்மை வாக்குகளை பெறும் அதிபர் வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இதுபற்றி கூறிய டிரம்ப், ‘நாம் 3-வது உலகநாடு போல் இருக்கிறோம். ஹேக்கிங் செய்ய கூடிய கணினி சாதனங்களை நாம் உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். அதிபராக ஜோ பைடனை எலக்டோரல் காலேஜ் தேர்வு செய்தால், அது பெரிய தவறாகி விடும். இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. உயர்மட்ட அளவில் மோசடிகள் நடந்துள்ளன’ என மீண்டும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்