'கொதிக்கும் எண்ணெய்.. மிளகாய்ப்பொடி.. சுத்தியல்'.. 'ஒருவழியா முடிச்சாச்சு'.. கள்ளக்காதலருடன் சேர்ந்து மனைவி துணிகரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொதிக்கும் எண்ணெயை கணவரை கட்டிப்போட்டு அவர் மீது ஊற்றிக் கொல்ல முயன்ற பெண், தன் கள்ளக் காதலருடன் கைது செய்யபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கில் உள்ளது பிரதாப்காத் குடியிருப்பு.  இங்கு பாவிசியா , குவின்சியா தம்பதியர் வசித்து வந்தனர். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இவர்களுக்கு 4 வயதில் இரட்டைக் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாவிசியாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. பாத்திரங்கள் வெளியே வந்து விழுந்தன. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

அவர்கள் வந்து பார்த்தபோது, வீட்டில் இரண்டு குழந்தைகளும் அழுதுகொண்டு இருந்துள்ளனர். பாவிசியாவோ, தலையில் காயத்துடனும், கண்ணில் மிளகாய்ப் பொடியுடனும் கழிவறையில் துடித்துக் கொண்டிருந்துள்ளார். அதே சமயம் வீட்டு ஹாலில் குயின்சியாவும் அவரது காதலரும் ஆயாசமாக அமர்ந்திருந்தனர்.

இருவரையும் விசாரித்தபோது, ஏற்கனவே இருந்த வீட்டில் குயின்சியாவுக்கு, சட்விர் என்கிற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது கணவருடன் இந்த புதிய வீட்டுக்கு குயின்சியா இடம் மாறி வந்துள்ளார். அதே குடியிருப்புக்கு சட்விரும் வந்து வேறு வீடு எடுத்து தங்கியுள்ளார். இருவருக்குமான பழக்கம் நாளடைவில் பாவிசியாவுக்கு தெரியவர, அவர் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

எனவே அவர் தூங்கியதும், கள்ளக் காதலரை வரவழைத்து, பாவிசியாவை உள்ளாடைகளுடன் கட்டிப் போட்டது மட்டுமல்லாமல், கொதிக்கும் எண்ணெயை மேல் ஊற்றி, மிளகாய்ப் பொடியை கண்ணில் தூவியுள்ளனர். பாவிசியா தன்னைக் காப்பாற்ற யாரேனும் வருவார்கள் என்று எண்ணி, பாத்திரங்களை தூக்கி வீசியுள்ளார். அதன் பின் பாவிசியா அலறியதால், அவரை கழிவறையில் வைத்துப் பூட்டியுள்ளனர். இந்த உண்மைகளை இருவரும் ஒப்புக்கொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

WOMAN, AFFAIR, HUSBANDANDWIFE, LOVE, MURDER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்