மணிக்கு 47 ஆயிரம் கிலோமீட்டர் வேகம்.. பூமியை நெருங்கும் ஆபத்தான விண்கல்..? நாசா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மிகவும் ஆபத்தானது என்று வகைப்படுத்தப்பட்ட விண்கல் ஒன்று அடுத்த மாதம் பூமியை நெருங்கும் என நாசா அறிவித்து உள்ளது.

Advertising
>
Advertising

பிரம்மாண்ட விண்கல்

சூரிய மண்டலத்தில் பிற கோள்களைப் போலவே விண்கற்கள் மற்றும் குறுங்கோள்கள் ஆகியவையும் சூரியனை சுற்றி வருகின்றன. இந்த விண்கற்கள் சில சமயங்களில் பூமிக்கு மிக அருகில் வருவது உண்டு. இருப்பினும் பூமியை கடந்து செல்லும் போது விண்கல்லிற்கும் பூமிக்கும் உள்ள தூரத்தின் அடிப்படையில் அவை ஆபத்தானதா இல்லையா என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவிக்கும். அந்த வகையில் மிகவும் ஆபத்தானது என்று வரையறுக்கப்பட்ட பிரமாண்ட விண்கல் ஒன்று அடுத்த மாதம் பூமியை கடந்து செல்ல இருப்பதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

1989JA

கடந்த 1989 ஆம் ஆண்டு பலோமர் ஆய்வகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல் 1989JA  என பெயரிடப்பட்டது. இது பூமியை நெருங்கும் வேளையில் பைனாகுலர் கொண்டு இந்த விண்கல்லை மக்கள் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.8 கிலோ மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கல் மணிக்கு 47,196 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை 40,24,182 கிலோமீட்டர் தூரத்தில் கடந்து செல்ல இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.இது ஆபத்தான அளவுக்கு விண்கல் ஒன்று கடந்து செல்லும் நிகழ்வு என வரையறுக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு ஆபத்தா?

கடந்த முறை அதாவது 1996 ஆம் ஆண்டு இந்த விண்கல் 4 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் பூமியை கடந்து சென்றது. தற்போது மீண்டும் இந்த விண்கல் பூமிக்கு அருகில் வருவதால் ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு அடைந்துள்ளனர். மிகப்பெரிய விண்கல் இது என்றாலும் 40,24,182 கிலோமீட்டர் தூரத்தில் பூமியை கடந்து செல்ல இருப்பதால் இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இருக்காது என நாசா தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விண்கல் வருகின்ற மே மாதம் 29 தேதி பூமியை கடக்க இருக்கிறது. அதே போல வரும் 2029 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் இந்த விண்கல் மீண்டும் பூமியை நெருங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதுபோல 2055 மற்றும் 2062 ஆம் ஆண்டுகளிலும் இந்த விண்கல் இதே போன்று பூமியை கடந்து செல்லலாம் எனவும் நாசா அறிவித்து இருக்கிறது.

சமீபத்தில் பூமியை நெருங்கிய பிரம்மாண்ட விண்கல் 138971 (2001 CB21) ஆகும். இது கடந்த மார்ச் 4 ஆம் தேதி 49,11,298 கிலோமீட்டர் தூரத்தில் கடந்துசென்றது. இந்த விண்கல் 1.3 கிலோமீட்டர் அகலம் இருந்ததாக நாசா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1.8 கிலோமீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட விண்கல் வரும் மார்ச் மாதத்தில் பூமியை நெருங்கிச் செல்லும் என நாசா அறிவித்திருப்பது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

 

NASA, 1989JA, ASTEROID, நாசா, விண்கல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்