‘அமெரிக்க தேர்தலுக்கும் .. பன்னீர் டிக்காவுக்கும் என்னய்யா சம்மந்தம்?’.. எதுக்கு இப்போ ட்ரெண்ட் ஆகுது?.. குழம்பும் ட்விட்டர் வாசிகள்.. ‘வைரல்’ காரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி பன்னீர் டிக்கா எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

ஆனால் அமெரிக்க அதிபருக்கும் பன்னீர் டிக்காவுக்கும் என்ன சம்பந்தம் என்கிற குழப்பம் எழலாம். அதற்கு பின்னால் சுவாரஸ்யமான ஒரு கதை உள்ளது. இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை வரை அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த சூழலில்தான்,  பன்னீர் டிக்கா எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டானது. இதற்கு காரணம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால்.

இந்திய வம்சாவழி பெண்ணான இவர், துணை அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்காக, தான் செய்த பன்னீர் டிக்காவின் போட்டோவை பதிவிட்டு,  “இந்த பன்னீர் டிக்காவை கமலா ஹாரிஸ்க்கு பிடிக்கும் என்பதற்காக செய்துள்ளேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் “உங்க ஊர்ல இதுக்கு பேர் தான் பன்னீர் டிக்காவா?”என கிண்டல் செய்ய, #PaneerTikka எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டானது. ஒரு பக்கம் டிரம்பும், பைடனும் கடுமையாக போட்டி போட்டு கொண்டிருக்க நெட்டிசன்களோ பன்னீர் டிக்காவை பிரபலமாக்கி ட்விட்டரையே சுத்தலி விட்டு வருகின்றனர். இது புரியாமல் பலரும் குழம்பி போய் வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்