எந்த நாட்டுக்கு போனாலும் மறக்காம ‘Toilet-டை’ எடுத்துச் செல்லும் வட கொரிய அதிபர்?.. இதை தொட்டா அவ்ளோதான்.. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் டாய்லெட்டை கையோடு எடுத்துச் செல்வதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

11 நாளைக்கு யாரும் சிரிக்கக்கூடாது

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ( Kim Jong-un), சின்ன விஷயங்களுக்கு கூட கடுமையான தண்டனைகள் கொடுத்து உலகளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியவர். இதன் காரணமாகவே இவரைப் பற்றிய செய்திகளை மக்கள் தேடிப் படிக்கின்றன்ர். சமீபத்தில் வடகொரிய அதிபராக 10 ஆண்டுகளை நிறைவு செய்ததுடன், தனது தந்தையின் 10-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, 11 நாட்களுக்கு யாருமே நாட்டில் சிரிக்கக் கூடாது என அதிபர் கிம் ஜாங் உன் ஒரு உத்தரவை பிறப்பித்ததாக சொல்லப்படுகிறது.

டாய்லெட்டை எடுத்துச் செல்லும் அதிபர்

இந்த நிலையில் சமீப காலமாக எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும், தனக்கானபிரத்யேக டாய்லெட்டை எடுத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வடகொரியா கமாண்டோ பிரிவின் முன்னாள் ஊழியர் ஒருவர் தி வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) ஊடகத்திடம் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ‘கிம் ஜாங் உன், பொதுக்கழிவறைகளை பயன்படுத்துவதை சில காலமாகவே நிறுத்திவிட்டார். அவர் போர்டபிள் டாய்லெட் ஒன்றை வடிவமைத்து அதை மட்டும்தான் பயன்படுத்துகிறார். எந்த நாட்டுக்கு சென்றாலும் இந்த டாய்லெட்டை அவர் கையோடு எடுத்துச் செல்வார். இந்த டாய்லெட்டை யார் பயன்படுத்தினாலும், தொட்டாலும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்.

முன்னாள் கமாண்டோ சொன்ன ரகசியம்

தன்னுடைய மலத்திலிருந்து தனது உடல்நலம் பற்றிய விஷயங்கள் வேறு யாருக்கும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு அவர் செய்கிறார். தனது மலம், தவறானவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டால், அதனால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்’ என கிம் ஜாங் உன் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

குண்டு துளைக்காத கார்

தொடர்ந்து பேசிய அவர், ‘கிம் ஜாங் உன், தான் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலுமே விஷேச ஏற்பாடுகள், வசதிகளை செய்து வைத்திருக்கிறார். ஆனால் தற்போதெல்லாம், புல்லட் துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) காரை மட்டும்தான் பயன்படுத்துகிறார். அந்த காரிலும், போர்டபிள் டாய்லெட் பொருத்தப்பட்டுள்ளது’ என வட கொரிய முன்னாள் கமாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

எடுத்த சபதம் நிறைவேறும் வரை காலில் செருப்பு போட மாட்டேன்.. 11 வருஷமா வைராக்கியத்தோடு காத்திருக்கும் இளைஞர்

திடீர் உடல் எடை குறைப்பு

அதிக உடல் எடையுடன் காணப்பட்ட கிம் ஜாங் உன், சில காலம் வெளியுலகிற்கு தன்னை காட்டிக்கொள்ளாமலே இருந்து வந்தார். திடீரென அந்நாட்டு நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிய அவர், உடல் எடை மிகவும் குறைந்து காணப்பட்டார். அதனால் அவருக்கு ஏதேனும் உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என கேள்விகள் எழுந்தன. இந்த சூழலில்தான், தனது உடல்நிலை குறித்து உலக நாடுகளுக்கு தெரிந்துவிடக் கூடாது என்று டாய்லெட்டை எடுத்துச் செல்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

யோவ்.. எனக்கு பசிக்குதுயா.. ஆசையா இருந்தேன், இப்படி சாப்பிட விடாம பண்ணிட்டீங்களே, நல்லா இருப்பீங்களா? கதறும் பெண்

NORTH KOREA KIM JONG-UN, PRESIDENT KIM JONG-UN, TAKES HIS OWN TOILET

மற்ற செய்திகள்