'அமெரிக்கா வேணாம்.. ஊர்லயே இருக்கலாம்'.. 'சோகத்தில் ஆழ்த்திய மொத்தக் குடும்பம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆந்திர குடும்பம் ஒன்றைச் சேர்ந்த அனைவரும் அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில் ஒன்றாக இறந்த நிலையில் கிடந்துள்ள சம்பவம் உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவின் வெஸ்ட் டெஸ் மோனிஸ் என்கிற பகுதியில் வசித்து வந்த சந்திரசேகர்(44), லாவண்யா (41) மற்றும் 15 வயதில் ஒரு சிறுவனும் 10 வயதில் ஒரு சிறுவனும் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இறந்து கிடந்ததாக பக்கத்து வீட்டார் காவல் துறைக்கு போன் செய்து கூறியுள்ளனர்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அங்கு துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்துள்ளதையும், ஆனால் சம்பவம் நடப்பதற்கு முன்பாக யாரும் அந்த வீட்டுக்கு வந்து போகவில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்திர சேகர், மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.
பின்னர் அங்கேயே செட்டில் ஆகி, தற்போது இந்த புது வீட்டுக்கு குடும்பத்துடன் வந்துள்ளதாகவும், ஆனால் அவரின் குடும்பத்தினரோ, அமெரிக்கா வேண்டாம், ஹைதராபாத்துக்கே போகலாம் என்று கூறி சந்திரசேகருடன் முரண்பட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.
மேலும், சில நாட்களுக்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்ட சந்திரசேகரே, தன் குடும்பத்தினரைக் கொன்றுவிட்டு தானும் இறந்திருக்கலாம் என்றும் அனுமானங்களை அக்கம் பக்கத்தினர் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவுக்காக போலீஸார் காத்திருப்பதோடு, தீவிரமாக விசாரித்தும் வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரேஷன் உணவுப் பொருட்கள் இனி வீட்டுக்கே.. எப்போ இருந்து?.. முதல்வர் அதிரடி!
- 'இது லிஸ்ட்லயே இல்லயே!'.. சாதிக்கு ஒருவர் என 5 துணை முதல்வர்களா? அதிரடி ஆலோசனையில் முதல்வர்!
- 'இனி நோ ஸ்கூல் பேக்'... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!
- விரைவில் தமிழக முதல்வராக வர வேண்டும்.. மு.க.ஸ்டாலினை வாழ்த்திய ஜெகன்!
- 'மின்துறை அமைச்சராக நடிகை ரோஜா??'... 'இன்ப அதிர்ச்சி கொடுக்க ஜெகன் முடிவு?'...
- 'வேலையை விட்டு நீக்கிய நிர்வாகம்'... 'விபரீத முடிவு எடுத்த இளம்பெண்'... பதறிப்போன ஊழியர்கள்!
- 'ஏமாந்துட்டேன்.. நான் போறேன்மா'.. மோசடி கும்பலிடம் சிக்கிய இளைஞர் செய்த விபரீத செயல்!
- ‘மருமகள் வைச்ச மட்டன் குழம்பு நல்லா இல்லைணு சொன்னது ஒரு குத்தமா’.. அப்பாவுக்கு மகன் கொடுத்த கொடூர தண்டனை!
- எம்.பி.யான இன்ஸ்பெக்டர்... முன்னாள் டி.எஸ்.பி.க்கு சல்யூட்... வைரலான புகைப்படம்!
- பதவியை ராஜினாமா செய்யும் ஆந்திர முதல்வர்? பரபரப்பாகும் அரசியல் களம்!