இன்னும் 1½ முதல் 'மூன்று' நாட்களுக்குள்... 'ஓமிக்ரான் வைரஸ் குறித்து...' - உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட 'எச்சரிக்கை' தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவின் உருமாறிய வைரசான ஓமிக்ரான் வைரஸ் பல நாடுகளில் லட்சக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்றளவும் முடிந்தபாடில்லை. அதோடு, கொரோனா வைரசில் வெவ்வேறு திரிபுகளாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக உள்ளது.
சில வாரங்களுக்கு முன் தென்ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் அதிகளவில் பரவி மக்களை பீதி அடைய செய்துள்ளது.
அண்டை நாடான பிரிட்டனில் இருந்து வருவோருக்கு பிரான்ஸ் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வருவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்பு பிரெஞ்சு பிரதமர் ஓமிக்ரான் தொற்று குறித்து எச்சரித்தார்.
ஓமிக்ரான் தொற்று காரணமாக ஐரோப்பாவிலேயே ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு பிரிட்டன். வெள்ளிக்கிழமை அங்கு கிட்டத்தட்ட 15,000 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானது.
தொற்றைக் கட்டுப்படுத்த ஜெர்மனி, நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதுவரை சந்திக்காத சவால் ஒன்றுக்கு ஜெர்மனி தயாராக வேண்டும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், தற்போது ஓமிக்ரான் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ள நாடுகளில், சுமார் ஒன்றரை நாட்கள் முதல் 3 நாட்களுக்குள் அதன் பாதிப்பு இருமடங்காவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த குறிப்பில் 'ஓமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 89 நாடுகளில் இதற்கு முன் அங்கு டெல்டா வகை வைரசை விட மிக வேகமாக பரவி வருகிறது.
ஓமிக்ரானின் தீவிரத்தன்மை குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும், அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது' என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒமைக்ரான் வைரஸ் பரவும் அபாயம்: தமிழகத்துக்குள் நுழைய இ-பாஸ் கட்டாயம்!
- ‘அச்சுறுத்தும் ஓமிக்ரோன்’.. இந்த விஷயங்களை கரெட்டா பாலோ பண்ணா பரவலை கட்டுப்படுத்திடலாம்.. சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய அட்வைஸ்..!
- ஓமிக்ரோன் பாதித்த நைஜீரியருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி.. சுகாதாரத்துறை செயலாளர்..!
- அஜாக்கிரதை வேண்டாம்..!- அதி வேகமாகப் பரவும் ஒமைக்ரான் வைரஸ்..! எச்சரிக்கும் WHO
- எது நடக்க கூடாதுன்னு நெனச்சமோ 'அது' நடந்துடுச்சு...! 'ஓமிக்ரான் வைரஸின் முதல் பலி...'
- 'அந்த' நாட்டுல இருந்து தான் வர்றீங்களா...? 'அப்போ உங்களுக்கு குவாரண்டைன் வேண்டாம்...' - ஆபத்தான நாடுகளில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடு...!
- நாம பண்ற 'தப்பு' இது தான்...! - ஓமிக்ரான் வைரஸ் குறித்து WHO தலைமை மருத்துவர் பகிர்ந்த 'முக்கிய' தகவல்...!
- இந்தியாவில் கொரோனா 'மூன்றாவது அலை' எப்போது...? - 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட IIT விஞ்ஞானி...!
- ஓமிக்ரான் 'டெல்டா வைரஸ' விட ஆபத்தானதா...? - அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் கருத்து...!
- இந்தியால நேத்து 'ஒருநாள்' மட்டும் 'இத்தனை' பேருக்கு ஓமிக்ரான் வைரஸா...? - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சகம்...!