‘இன்னும் கொரோனா பரவல் முடியல’!.. இந்த விஷயத்துல ரொம்ப ‘கவனம்’ தேவை.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதில் கவனம் வேண்டும் என்று உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, நோய் தொற்று வேகமாக பரவியது. இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 4 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே பல நாடுகளில் உருமாறிய டெல்டா கொரோனா வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்தது. மேலும் இந்தியாவில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதனால் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் பல மாநிலங்களில் நோய் தொற்று குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு, ‘ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதில் உலக நாடுகள் கவனத்துடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டும். பெருந்தொற்று காலம் இன்னும் முடிந்துவிடவில்லை. கொரோனா தொற்றின் புதிய அலை சில மாதங்களில் தாக்க வாய்ப்புள்ளது. அதனால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் மேலும் 'ஒரு வாரம்' ஊரடங்கு நீட்டிப்பு...! புதிய தளர்வுகள் என்ன...? - முழு விவரங்கள்...!
- 'இனி ஊசி தேவையில்லை'!.. தோல் வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து!.. புதிய முயற்சி கை கொடுக்குமா?
- 'ஒரு டோஸ் போட்டாலே போதும்... டெல்சா ப்ளஸ் கொரோனாவை குணப்படுத்தலாம்'!.. அடுத்த பரிமாணத்தில் புதிய தடுப்பூசி ரெடி!!
- கொரோனாவால் உயிரிழப்பா?.. இழப்பீடு வழங்குவது தொடர்பாக... காரசார விவாதம்!.. கட் அண்ட் ரைட்டாக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!
- இந்தியாவுக்கு வருகிறது 4வது தடுப்பூசி!.. முன்னேறிய நாடுகளின் முதல் சாய்ஸ் 'இது' தான்!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- 'முதல் டோஸ் ஒரு ஊசி!.. அடுத்த டோஸ் வேறொரு நிறுவனத்தின் ஊசி'!.. வலுக்கும் ஆற்றல்!.. ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களை... பாஸ்போர்ட் உடன் இணைப்பது எப்படி?.. முழுமையான தகவல் உள்ளே
- தமிழகத்தில் ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!.. புதிய தளர்வுகள் அறிவிப்பு!.. எவை இயங்கும்?.. எவை இயங்காது?.. முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு!.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட மருத்துவ வல்லுநர் குழு!
- 'இந்தியா உட்பட 85 நாடுகள்'... 'இத கண்டுக்காம விட்டா பெரிய ஆபத்து'... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!