"மிஸ்டர் டிரம்ப், நாங்க சொல்றத கொஞ்சம் கேளுங்க"... 'WHO'வின் பேச்சைக் கேட்காமல்... தனி 'டிராக்'கில் பயணிக்கும் அமெரிக்க 'அதிபர்'!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா தரும் நிதியை தடுத்து வைத்துள்ள அதிபர் டிரம்ப் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா, ஜெர்மனி உட்பட பல உலக நாடுகள் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன. சீனா ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். சீனா வேண்டுமென்று தான் கொரோனா வைரசைக் கட்டுப்டுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவாக செயல்படுவதாக கூறி உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். தங்களது இந்த நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என பலர் டிரம்பிடம் கோரிக்கை விடுத்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அவர்களும் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார். நீங்கள் அளித்து வந்த நிதி மற்ற நாடுகளுக்கு மட்டுமில்லாமல் அமெரிக்காவிற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கொரோனா வைரஸ் நீண்ட நாள் நீடிக்கவுள்ளதால் அமெரிக்கா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் நீண்ட நாட்களுக்கு உலக மக்களை அச்சுறுத்தும் எனவும், அதனுடன் இணைந்து நாம் இன்னும் நீண்ட நாட்கள் பயணிக்க உள்ளதால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் டெட்ரோஸ் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "உலகமே ஆடிப்போயி கெடக்கு"... "கொரோனா இன்னும் உக்கிரமா அடிக்கும்"... உலக நாடுகளை எச்சரிக்கும் 'WHO'!
- கடந்த 'ஜனவரியிலேயே' வாங்கி 'பதுக்கி விட்டது சீனா...' தேவையைவிட '18 மடங்கு' வாங்கிக் 'குவித்தது'... 'இப்போது சீனா வைப்பது தான் விலை...'
- ''இந்த மருந்தால் எந்த பயனும் இல்லை...'' ''உயிரிழப்புகளின் எண்ணிக்கை தான் அதிகரித்துள்ளது...'' 'போற்றிய நாடே தூற்றிய அவலம்...'
- கொரோனாவை 'காரணம்' காட்டி... 'இந்த' விஷயத்தில் ஏதாவது திட்டமிட்டால்... 'சீனாவுக்கு' கடும் 'எச்சரிக்கை' விடுத்துள்ள அதிபர் 'ட்ரம்ப்'...
- ‘கொரோனாவுக்கு இடையே’... ‘சீன எல்லையில்’... ‘அமெரிக்காவின் நடவடிக்கையால்’... ‘அதிகரிக்கும் பதற்றம்’!
- "ஊரடங்கை தளர்த்தாதீர்கள்..." "குளிர்காலத்தில் 2வது அலை வீசக்கூடும்..." "விளைவுகள் மோசமாக இருக்கும்..." 'அமெரிக்காவை' எச்சரிக்கும் 'மருத்துவர்கள்...'
- 'கொரோனாவுக்கு சீனாதான் பொறுப்பு...' 'அமெரிக்கா' கேட்கும் மலைக்க வைக்கும் 'இழப்பீடு'...
- 'கிம் ஜாங் உன்' பூரண நலம் பெற 'வாழ்த்துகிறேன்...' 'ஆரோக்கியத்துடன்' இருக்கிறார் என 'நம்புகிறேன்...' "வாழ்த்து கூறியவர் யார் தெரியுமா...!"
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'என்னோட மக்கள் தான் முக்கியம்'... 'ட்ரம்ப் கொளுத்திய முதல் சரவெடி'... 'என்ன நடக்கும்'... பல கேள்விகளோடு இந்தியர்கள்!