"கொரோனா பத்தின 3 மிகப்பெரிய வதந்திகள் இதுதான்".... உண்மையை உடைத்துச் சொன்ன WHO..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா குறித்து பொதுவாக நம்பப்படும் 3 தகவல்களை உலக சுகாதார மையம் மறுத்ததோடு, அவை வதந்தி எனவும் தெளிவுபடுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

கொரோனா

2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதிலும் பரவி மனித குலத்திற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து கோவிட் வைரஸில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக புதுப்புது வேரியண்ட்கள் உருவாகி, மக்களை மிகுந்த சிரமத்தில் ஆழ்த்தி வருகிறது. இருப்பினும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்ததற்கு பின்னர், கொரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து உள்ளது.

3 பொய்கள்

கொரோனா வைரஸின் சமீபத்திய வேரியண்ட் ஆன 'ஓமிக்ரான்' குறித்து பொதுவாக மக்களிடம் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதிகாரப்பூர்வமில்லாத இந்த தகவல்கள் காரணமாக, பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக உலக சுகாதார மையம் கவலை தெரிவித்து உள்ளது.

அதன்படி, ஓமிக்ரான் வேரியண்ட் குறித்து பரப்பப்படும் 3 முக்கிய வதந்திகளை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல்கள் பொய்யானவை என உலக சுகாதார மையம் தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஓமிக்ரான் மிதமான வேரியண்ட்

கொரோனா வைரஸின் சமீபத்திய வேரியண்ட்டான ஓமிக்ரான் மிதமான வேரியண்ட் என மக்களிடம் தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அது உண்மையில்லை எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதிலும் கடைசி ஒருவாரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்திருப்பதாக WHO தெரிவித்திருக்கிறது.

நோய்த்தொற்று முடிவுக்கு வந்துவிட்டது

மக்கள் கொரோனா நோய்த்தொற்று காலம் முடிவிற்கு வந்துவிட்டதாக நினைப்பதாகவும்  ஆனால் அது உண்மையில்லை எனவும் உலக சுகாதார மையம் எச்சரித்து உள்ளது. 'கடைசி ஒரு மாதத்திற்குள் பதிவான 99.99 சதவீத கொரோனா நோய்த் தொற்றுகள் அனைத்தும் ஓமிக்ரான் வைரஸ் காரணமாக ஏற்பட்டவை' என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதுதான் கடைசி வேரியண்ட்

"மக்கள் இந்த ஓமிக்ரான் தான் கடைசி வேரியண்ட் என நினைக்கிறார்கள். அது நிரூபிக்கப்படாத கூற்று" எனத் தெரிவித்து இருக்கிறார்கள் உலக சுகாதார மைய அதிகாரிகள். சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் புதிய வகை கொரோனா வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தடுப்பூசிகள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு மக்களிடம் நோய், எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்ட மருத்துவர்கள், மக்கள் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

WHO, COVID19, OMIRON, கொரோனா, ஓமிக்ரான், கோவிட்19

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்