"கடைசில எங்களையும் டிக்-டாக் பண்ண வச்சிட்டிங்களே...!" "வதந்திகளைத் தடுக்க எங்களுக்கு வேற வழி தெரியல..." 'கொரோனாவுக்கு' எதிராக களத்தில் இறங்கிய 'WHO'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பரவல் குறித்து பரப்பப்படும் பொய்யான வதந்திகளை தடுத்து, மக்களிடம் உண்மைத் தகவல்களை எடுத்துச் செல்ல உலக சுகாதார அமைப்பு டிக்-டாக் செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 60 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயரிழந்துள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் முழு வீச்சில் செயலாற்றிக் கொண்டிருக்கும் வேலையில், கொரோனா குறித்த பல்வேறு வதந்திகளும் வேகமாகப் பரவி வருகிறது. இதுபோன்ற தவறான தகவல்களைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு தற்போது சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் டிக்-டாக் செயலியில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ தற்போது 6.5 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.
இளம் பெண்களின் நடன அசைவுகளுக்கும், அரசியல் விமர்சன வீடியோக்களுக்கும் கிடைக்கும் வரவேற்பு இப்படியான வதந்திகளைத் தடுக்கும் டிக்டாக் வீடியோக்களுக்கு கிடைப்பதில்லை என்றாலும், உலக சுகாதார அமைப்பின் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பை பின்பற்றி, யுனிசெஃப்பும், ரெட் க்ராஸ் சொசைட்டியும் கூட டிக்டாக் செயலி வழியாக தகவல்களைப் பதிவு செய்து வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- "கொரோனா மட்டும் நாட்டுக்குள்ள வந்துச்சு..." "தொலைச்சு கட்டிருவேன்..." "தலைவனுக்கு பயப்படுவதா?... கொரோனாவுக்கு பயப்படுவதா?" விழி பிதுங்கும் 'வடகொரிய' அதிகாரிகள்...
- "கொடுத்த கடனையா திருப்பிக் கேக்குற..." ஒரே ஒரு 'வதந்திதான்'... ஒட்டுமொத்தமா சோலிய 'முடிச்சுட்டான்'...
- கொரோனாவுக்கு 'நோ சிகிச்சை'... 'நோ பயம்'... 'பூரண குணம்'... பிறந்த குழந்தையின் 'அபார' நோய் எதிர்ப்பு சக்தி... 'மருத்துவர்கள் ஆச்சரியம்!'...
- "இப்போ எப்படி வந்து தாக்குதுன்னு பாக்குறேன்..." "கொரோனான்னா என்ன பெரிய கொம்பா.... யாருகிட்ட... " பாதுகாப்புக்காக 'விமானப்பயணிகள்' செய்த 'விநோத' செயல்... 'வைரல் வீடியோ...
- என் பொண்ணுக்கு ‘கொரோனா’ இல்ல... அவ ‘ஆபத்துல’ இருக்கா... ‘மீட்க’ கோரி ‘தந்தை’ எழுதிய ‘உருக்கமான’ கடிதம்...
- 'கடமைக்காக கல்யாணத்தை தள்ளிப்போட்டாரு!'... 'அவருக்கு இப்படி நடந்தத ஏத்துக்கவே முடியல!'... உணர்ச்சி பொங்க 'மக்கள்' கண்ணீர்!
- குழந்தையிடம் தோற்றுப் போன 'கொரோனா'... 'குட்டிப்பாப்பா' போட்ட 'சுட்டி' நடனம்... 'இணையத்தை' கலக்கும் 'வைரல் வீடியோ'...
- VIDEO: 'அழுகாதீங்க செல்லங்களா!... 'கொரோனா'வ அடிச்சு பறக்கவிட்றலாம்'... மழலையாக மாறிய சீன மருத்துவர்கள்!... வைரல் வீடியோ!
- அருகில் ‘கொரோனா’ பாதிப்புள்ளவர்கள் இருக்கிறார்களா?... ‘கண்டறிய’ உதவும் புதிய ‘ஆப்’ அறிமுகம்...