இதுவரை 'பார்த்ததெல்லாம்' அல்ல... 'இனிதான்' கொரோனாவின் 'கோரமான' பாதிப்புகள் இருக்கும்... என்ன 'காரணம்?'... 'அதிர்ச்சி' கொடுக்கும் 'எச்சரிக்கை'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவின் கோரமான பாதிப்புகளை நாம் இனிதான் சந்திக்க இருக்கிறோம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது இருந்தே அனைத்து நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது. கொரோனா பாதிப்பை பெருந்தொற்றாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் இணைந்து போராட வேண்டும் என அழைப்பும் விடுத்தது. இதையடுத்து மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், சீனா உள்ளிட்ட சில நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. தற்போதுவரை கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 1.7 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவின் மோசமான முகத்தை நாம் இன்னும் பார்க்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ், "நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொரோனா வைரஸை தடுக்க வேண்டும். மக்கள் பலர் இன்னும் இதன் வீரியத்தைப் புரிந்துகொள்ளவில்லை. கொரோனா பாதிப்பை பொறுத்தவரையில் அதன் கோரமான பாதிப்புகளை இனிதான் நாம் சந்திக்க போகிறோம்" என எச்சரித்துள்ளார். ஆனால் அதற்கான காரணங்கள் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக கொரோனா வைரஸ் ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. அது நடந்தால் அங்குள்ள மோசமான சுகாதாரம் காரணமாக ஆப்பிரிக்க நாடுகள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது. அதைக் குறிப்பிட்டு உலக சுகாதார நிறுவனம் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சில நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் வேளையில் உலக சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- இனி ‘இவங்களுக்கும்’ கொரோனா டெஸ்ட் நடத்த போறோம்.. தமிழக அரசு ‘அதிரடி’ முடிவு..!
- 'சென்னை'யில் பேருந்து சேவை... 'இந்த' தேதியில் இருந்து தொடங்குகிறதா?... 'பயணிகளுக்கு' பயங்கர கட்டுப்பாடுகள் விதித்த போக்குவரத்துக்கழகம்!
- '15 பக்கங்களுக்கு செய்திகளே இல்லை!'.. செய்தித்தாளைப் பார்த்து நொறுங்கிப் போன மக்கள்!.. அமெரிக்காவை உறையவைத்த துயரம்!
- 'தெலுங்கானா' டூ சொந்த 'ஊர்'... நடந்தே வந்த '12 வயது' சிறுமி... வீட்டை நெருங்குகையில் நடந்த... 'துயர' சம்பவம்...!
- 'ஒரு பக்கம் ஐடி'... 'மறுபக்கம் இடியாய் விழுந்த செய்தி'... 'கலங்க வைத்த புதிய ரிப்போர்ட்'... நிம்மதியை இழந்த அமெரிக்க மக்கள்!
- 'சென்னை'யோட இந்த பகுதில தான்... கொரோனா பாதிப்பு 'ரொம்ப' அதிகமாம்!
- "அதை கௌரவ கொறைச்சலா நெனைச்சேன்.. ஆனா எது நிரந்தரம்னு கொரோனா மூலமா கடவுள் உணர்த்திட்டாரு!".. பழைய வேலைக்கு திரும்பிய கால் டாக்ஸி டிரைவர்.!
- இஸ்லாமிய மதபோதகர் ‘இறுதி சடங்கில்’ குவிந்த லட்சக்கணக்கான மக்கள்.. ‘கேள்விக்குறியான’ ஊரடங்கு..!
- ஐ.டி. துறையில் உள்ள இந்தியர்களுக்கு சிக்கல்!?.. கொரோனா வைரஸ் பாதிப்பால்... அதிபர் ட்ரம்ப் அதிரடி முடிவு!