'ஐரோப்பாவில் இருந்து வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!'... பலியானவர்களில் 95 சதவீதம் பேர் இவர்களா?... உலக சுகாதார அமைப்பு பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐரோப்பாவில், கொரோனா வைரசுக்கு பலியானவர்களில் 95 சதவீதம்பேர், 60 வயதை கடந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஐரோப்பாவில் தான் அதிகமாக உள்ளது. இந்த கொடிய ஆட்கொல்லி வைரஸால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு, ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு அலுவலகத்தின் தலைவர் டாக்டா ஹன்ஸ் க்ளுஜ் கூறுகையில், கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் ஐரோப்பாவில் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு புள்ளிவிவரத்தில், ஐரோப்பாவில் பலியானோரில் 95 சதவீதத்துக்கு மேற்பட்டோர் 60 வயதை கடந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் 80 வயதை தாண்டியவர்கள்.
அதற்காக கொரோனா தாக்குவதற்கு வயது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. வயதானவர்களை மட்டுமே கொரோனா தாக்கும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அது தவறானது.
ஐரோப்பாவில், 50 வயதுக்கு உட்பட்ட கொரோனா நோயாளிகளில் 10 முதல் 15 சதவீதம் பேருக்கு மிதமான அல்லது கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வளரும் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களும் தீவிர கண்காணிப்பு தேவைப்படும் அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர்.
அதே சமயத்தில், நூறு வயதை தாண்டிய ஒரு சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்திருப்பது நல்ல அம்சம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 950 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதால், சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கையில், இத்தாலிக்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டி விட்டது.
அதுபோல், இத்தாலியில், பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது.
உலக அளவில் கொரோனாவுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்தை எட்டியது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அதிலிருந்து எல்லாம் கொரோனா பரவாது’... ‘அதற்கு ஆதாரம் இல்ல’... 'சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்’!
- 'கொரோனா வந்தாலும் வந்துச்சு'...'வேலையில்லா இளைஞர்களுக்கு வந்த வாய்ப்பு'... தமிழக அரசு முடிவு!
- '20 வருடங்களில்' இல்லாத அளவுக்கு... திடீரென 'துப்பாக்கிகளை' வாங்கிக்குவித்த அமெரிக்கர்கள்... என்ன காரணம்?
- ‘8 மாத கர்ப்பம்’!.. ‘திடீர்ன்னு வந்த ஆர்டர்’.. 250கிமீ கார் டிராவல்.. ‘சல்யூட்’ போட வைத்த திருச்சி நர்ஸ்..!
- 'மாஸ்க்' அணிவதால் 'மற்றவர்களுக்கே' அதிக பாதுகாப்பு... நம்மைக் காக்க 'இது' கட்டாயம்... வெள்ளை மாளிகை 'அதிகாரி' தகவல்...
- 'சம்பளம் கொடுக்க பணம் இல்ல'...'36,000 ஊழியர்களுக்கு பெரிய அதிர்ச்சி'... பிரபல நிறுவனம் அதிரடி!
- மருத்துவர்கள் மீது 'கல்வீச்சு' நடத்திய மக்கள்... எல்லாத்துக்கும் காரணம் 'அந்த' வீடியோ தான்... 'அதிர்ச்சி' பின்னணி!
- 'டாஸ்மாக் கடைகள் உடைப்பு...' 'மதுபாட்டில்கள் திருட்டு...' 'டாஸ்மாக் மூடப்பட்டதால் தொடரும் குற்றங்கள்...'
- ‘டவுட் கேட்ட 6-ம் வகுப்பு மாணவி’... ‘வித்தியாசமாக வீட்டுக்கே வந்து’... ‘கணிதப் பாடம் நடத்திய ஆசிரியர்’... 'புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்'!
- 'நாங்கள் தகவல்களை மறைத்தோம் என்று சொல்வது வெட்கங்கெட்ட பொய்!'... அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு கடுமையாக கொந்தளித்த சீனா!