'அந்த வைரஸ்கள் போலவே’... ‘கொரோனாவுக்கும் மருந்து கண்டுப்பிடிப்பதில்’... வெளியான அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்எச்.ஐ.வி, டெங்கு போன்று கொரோனாவுக்கும் தடுப்பூசி கண்டுப்பிடிக்க முடியாத நிலைமை ஏற்படலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நப்ரோ கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக இதுவரை மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இந்நிலையில், லண்டனில் உள்ள குளோபல் ஹெல்த் இம்பீரியல் கல்லூரியின் மருத்துவ பேராசிரியரும், உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நப்ரோ சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், ‘தடுப்பூசி கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு பலம் வாய்ந்த வைரஸ்கள் உள்ளன. பல வைரஸ்களுக்கு மருந்துகள் இல்லை. சில நாடுகளில் டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள் இருந்தாலும் அது 9 முதல் 45 வயது உடையவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளது. எச்.ஐ.வி., டெங்கு போன்ற வைரஸ்களுக்கு இதுவரை தடுப்பூசி இல்லாத நிலையே உள்ளது. அதேபோல் கொரோனாவுக்கும் தடுப்பூசி கண்டுப்பிடிக்க முடியாத நிலை உருவாகலாம். அப்படி தடுப்பூசி உருவாக்கப்பட்டாலும், பாதுகாப்பனதாகவும், பலனளிக்கக்கூடியதாகவும் இருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஒரு மருந்து தயாரித்தால் அது வெற்றிபெறுமா என்று உடனே கணிக்க முடியாது. அதற்கென பல கட்ட சோதனைகள் உள்ளன’ என தெரிவித்துள்ளார். இதேபோல் ஹூஸ்டனில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றின் பேராசிரியர் டாக்டர் பீட்டர் ஹோடெஸ் பேசுகையில், “நாங்கள் 18 மாதங்களுக்குள் ஒரு தடுப்பூசியை உருவாக்கிவிட முடியும் என துரிதப்படுத்தவில்லை. இது, சாத்தியமற்றது என்றும் அர்த்தம் கிடையாது. ஆனால், அப்படி அமைந்தால் அது ஒரு வீர சாதனையாகும்” எனக் கூறியிருந்தார்.
எனினும் முந்தைய நோய்களான எச்.ஐ.வி. மற்றும் மலேரியா போலின்றி கொரோனா வைரஸ் வேகமாக மாறாது என்பதால், தாமதம் ஆனாலும் தடுப்பூசி நிச்சயம் கண்டுப்பிடிக்க முடியும் என்று அமெரிக்காவின் முன்னணி கொரோனா நிபுணர் டாக்டர் அந்தோணி ஃபாஸி உள்பட பல மருத்துவ நிபுணர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. இதனால், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தொடர்ந்து தீவிரம் காட்டுகிறார்கள். ஏற்கனவே 102 கொரோனா தடுப்பூசி ஆய்வு சோதனைகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதில் 2 தடுப்பூசி மருந்துகள் மனிதர்களிடம் சோதனை நடத்தி வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா டூட்டிக்கு போன இளம் காவலர்'... 'சாலையில் திரும்பும்போது கண்முன்னே வந்த பயங்கரம்'... சென்னையில் நடந்த கோரம்!
- 'அந்த நாட்டில் இருந்து'... 'வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க'... ‘இந்தியாவின் ராஜதந்திரம்’... ‘ஆர்வம் காட்டும் மாநிலங்கள்’!
- VIDEO: 'அந்த காரணம் தான் அல்டிமேட்!'.. மதுபானம் வாங்க வந்த குடிமகன்களுக்கு... மலர் தூவி மரியாதை!.. டெல்லியில் பரபரப்பு!
- 'அதிரடி' நடவடிக்கைகளால்... '50 நாட்களுக்கு' பின் 'பூஜ்ஜியம்' ஆன எண்ணிக்கை... 'நிம்மதி' அடைந்துள்ள 'நாடு'...
- கடலூரில் மேலும் 68 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 228 ஆக உயர்வு! கோயம்பேடு சந்தையில் இருந்து போனவர்களால்தான் அதிகமான நோய்த்தொற்று!
- 'உயிரிழந்தவர்கள்' பெரும்பாலானோருக்கு இருந்த 'குறைபாடு'... 'இதை' கொடுத்தால் 'வேகமாக' குணமடையலாம்... ஆய்வாளர்கள் 'புதிய' தகவல்...
- "தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு".. "சென்னையில் மட்டும் மாற்று முடிவு!"- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
- 'இதுதான் கொரோனாவிற்கு மருந்து...' 'உங்க முன்னாடியே குடிச்சு காட்டுறேன்...' இதுவரைக்கும் எங்க நாட்டுல யாருமே சாகல...!
- 'நானோ’ துகள்கள் சார்ந்த ‘ஆன்டிமைக்ரோபையல் பூச்சு...' 'கொரோனா' வைரசை செயலிழக்க செய்யும் 'புதிய தொழில்நுட்பம்...' 'சென்னை ஐ.ஐ.டி.யின் அசத்தல் கண்டுபிடிப்பு...'
- 'சென்னை கழிவு நீரில் 'கொரோனாவின் இறந்த செல்கள்'... 'தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக கண்டுபிடிப்பு'... பரபரப்பு தகவல்!