‘சீனாவின் ‘வூகான்’ ஆய்வகத்திலிருந்து பரவியதா ’கொரோனா வைரஸ்’?’ - உலக சுகாதார நிறுவனம் பரபரப்பு அறிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பரவிய காலம் முதலே, இந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற பல மர்மங்கள் நிலவி வருகிறது.

சீனாவின் வூகான் மாகாணத்தின் சந்தையில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது எனக் கூறப்பட்டு வருகிறது என்றாலும், வூகான் நகரில் உள்ள பரிசோதனை மையத்தியிலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்ககூடும் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் சீனாவில் முகாமிட்டு ஆய்வு நடத்தியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவு தற்போது வெளிவந்து, செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் உலக சுகாதார அமைப்பின் உணவு பாதுகாப்புத்துறை துறை அதிகாரி பீட்டர் பென் எம்பரெக்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'வூகான் நகரில் உள்ள பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பில்லை. நாங்கள் ஆய்வு செய்த போது சீன அரசு முழு ஒத்துழைப்பு அளித்தது, அதுமட்டுமல்லாமல், 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்