சபாஷ் 'சீனா'... 'வைரஸ்' எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சுக்க... நாங்களும் 'ரெடியா' இருக்கோம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதற்கு சீனாவை அமெரிக்கா உட்பட சில உலக நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சீனாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டை தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

சீனாவின் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நிலையில், அங்குள்ள ஆய்வுக் கூடத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட சில உலக நாடுகள் சீனாவின் மீது குற்றஞ்சாட்டியது. இதனை சீனா தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதை கண்டறிய சர்வதேச விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள விசாரணைக்கு ஒத்துழைப்பதாக சீன அரசு கூறியுள்ளது. மேலும் இந்த விசாரணை பாரபட்சமின்றி நடைபெற வேண்டும் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்த விசாரணைக்கு சீனா ஒத்துழைப்பு அளித்ததற்கு உலக சுகாதார நிறுவனம் சீனாவைப் பாராட்டியுள்ளது. அந்த அமைப்பின் சுகாதார அவரசகால திட்டத்தின் செயல் இயக்குனர் ரியான் அளித்த பேட்டியில், 'சீன அதிகாரிகள், உலக நாடுகளின் அரசுகள், ஏன் நாங்களும் கூட இந்த வைரஸ் எப்படி உருவானது என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விசாரணைக் குழுவில், பல நாடுகளின் விஞ்ஞானிகள் இடம்பெற்றால் தான் விசாரணை திருப்திகரமாக நடக்கும் என தான் நம்புவதாகவும், மேலும் விசாரணை எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ரியான் கூறியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்