"இந்த 4 இருமல் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்துடாதீங்க".. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளை உபயோகிக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.
Also Read | உலகத்திலேயே அதிக வயசு வாழ்ந்த நாய்க்கு நேர்ந்த சோகம்.. கின்னஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 சிறுவ சிறுமியர்கள் உயிரிழந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகளுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த நான்கு மருந்துகளை உட்கொண்டால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 மருந்துகள்
ஹரியானாவில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த மருந்துகளை தயாரித்திருப்பதாகவும், அவை கள்ள சந்தைகள் மூலமாக ஆப்பிரிக்க நாடுகளில் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நிறுவனம் தயாரித்த Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup நான்கு மருந்துகளையும் உபயோகிக்க வேண்டாம் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.
நான்கு தயாரிப்புகளும் காம்பியாவில் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இவை முறைசாரா சந்தைகள் மூலம் பிற நாடுகளுக்கு அல்லது பிராந்தியங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் எனவும் WHO தெரிவித்திருக்கிறது. ஜூலை மாதத்தில் இருந்து குழந்தைகளிடையே சிறுநீரக உபாதைகள் அதிகரித்திருப்பதை காம்பியா அதிகரிகள் உறுதி செய்ததை தொடர்ந்து உலக சுகாதர மையம் இதுகுறித்த விசாரணையில் இறங்கியது.
எச்சரிக்கை
மருந்துகளை ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்ததில் அதில் டைஎத்திலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் ஆகியவை அதிக அளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக WHO தெரிவித்திருக்கிறது. இந்த மருந்துகளை உபயோகித்தால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி, மரணத்திற்கு வழிவகுக்கும் கடுமையான சிறுநீரக காயம் ஆகியவை ஏற்படலாம் எனவும் உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம், காம்பியாவிற்கு மட்டும் இத்தகைய மருந்துகளை அனுப்பியிருக்கலாம் என இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு சுட்டிக்காட்டியதாக WHO தெரிவித்திருக்கிறது. இருப்பினும், அந்நிறுவனத்தின் பிற தயாரிப்புகளில் இத்தகைய ஆபத்தான பொருட்கள் இருக்கலாம் எனவும் அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம் WHO எச்சரித்திருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- குரங்கு அம்மை நோய்: உலக சுகாதார அமைப்பு சொன்ன ஆறுதலான விஷயம்..ஆனா அப்படி ஒரு பிரச்சனையும் இருக்காம்..!
- "குரங்கு அம்மையை தடுக்கணும்னா இந்த 5 விஷயத்தையும் உடனடியா செஞ்சாகனும்".. உலக நாடுகளுக்கு WHO கொடுத்த எச்சரிக்கை..!
- "கொரோனா பத்தின 3 மிகப்பெரிய வதந்திகள் இதுதான்".... உண்மையை உடைத்துச் சொன்ன WHO..!
- முன்னேறும் ரஷ்ய ராணுவம்.."உடனே லேப்-ல இருக்கத எல்லாம் அழிச்சிடுங்க" உக்ரைனுக்கு WHO எச்சரிக்கை..!
- ஒமைக்ரானோட 'பவரு' உங்களுக்கு புரியல இல்ல..? WHO வின் எச்சரிக்கைய கேளுங்கப்பா
- பேராபத்து.. ஓமிக்ரான் தொற்றே இன்னும் முடியல.. அதற்குள் பல வேரியண்ட்டா? WHO வார்னிங்
- "ஒமிக்ரான் பாதிச்ச எல்லாருக்கும்... அந்த 'ஒண்ணு' மட்டும் ஒரே மாதிரி இருக்கு.." எச்சரிக்கும் 'விஞ்ஞானிகள்'..
- அச்சுறுத்தும் ஓமிக்ரோன்.. ‘ஆதாரம் கிடைச்சிருக்கு’.. தடுப்பூசி போட்டவங்களும் எச்சரிக்கையாக இருக்கணும்.. WHO தலைவர் முக்கிய தகவல்..!
- இன்னும் 1½ முதல் 'மூன்று' நாட்களுக்குள்... 'ஓமிக்ரான் வைரஸ் குறித்து...' - உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட 'எச்சரிக்கை' தகவல்...!
- 'ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓமிக்ரானைக் கண்டு அச்சப்படும் நிலையில்...' - WHO விஞ்ஞானி வெளியிட்ட முக்கிய தகவல்...!