IHU வைரஸ் அபாயகரமானதா? என்ன சொல்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒமைக்ரான் ரக வைரஸைத் தொடர்ந்து புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள IHU வைரஸ் எவ்வளவு அபாயகரமானதாக இருக்கும்? மீண்டும் உலகுக்கு இந்த வைரஸ் பெரிய அச்சுறுத்தலைத் தருமா? போன்ற கேள்விகளுக்கு சர்வதேச மருத்துவ ஆய்வாளர்கள் விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.

Advertising
>
Advertising

கொரோனா வைரஸின் ஒரு வகையான ஒமைக்ரான் குறித்தே நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அதற்குள் அடுத்த ரகமான IHU வைரஸ் பாதிப்பு பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு தொடங்கிய கொரோனா போராட்டம் 2022-ம் ஆண்டிலாவது முடிந்து வைரஸ் இல்லா வாழ்க்கையை நாம் வாழத் தொடங்கலாம் எனப் பலரும் நம்பி கொண்டிருந்தோம்.

ஆனால், கொரோனா வைரஸின் பல்வேறு ரக வைரஸ் மற்றங்களும் தொடர்ந்து பரவத் தொடங்கி உள்ளன. இதுகுறித்து இந்திய மருத்துவர்கள் கூறுகையில், ‘டெல்டா ரக வைரஸ் இந்தியாவில் பரவினாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

ஆனாலும், டெல்டாவின் இடத்துக்கும் ஒமைக்ரான் வைரஸ் வந்து தற்போது மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது’ என்கின்றனர். தற்போது இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் முதல் மரணம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் தற்போது IHU என்னும் வைரஸ் பாதிப்பு 12 பேரை பாதித்து உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கேமரூன் என்ற நாட்டுக்கு பயணம் செய்து திரும்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. உலக சுகாதர நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் IHU என்னும் புது ரக வைரஸ் வேறு எந்த நாடுகளிலும் கண்டறியப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.

வெறும் 12 பேரிடம் மட்டுமே இந்த ரக வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அபாயகரமானதா இல்லையா என்பது குறித்து இப்போது எதுவுமே சொல்ல முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். போதிய ஆய்வுகளுக்கு வெறும் 12 பேரின் மாதிரிகளை வைத்து சோதனை செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், உலக சுகாதர நிறுவனத்தின் கூற்றின் அடிப்படையில் தற்போதைக்கு IHU வைரஸால் எந்த ஆபத்தும் இல்லை இதனால் உலக மக்கள் பதற வேண்டாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

OMICRON, ஒமைக்ரான், கொரோனா வகை, IHU வைரஸ், CORONA VARIANT, IHU VIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்