"ஹன்டா வைரஸ் என்றால் என்ன?" அதுவும் 'கொரோனாவை' போல் 'பரவக்கூடியதா?...' அதன் 'அறிகுறிகள்' என்ன?... 'முழுமையானத் தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்ததாக வந்த செய்தியை அடுத்து, அதற்குள் மற்றொரு நோயா என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். ஹன்டா வைரஸ் குறித்த முழுமையானத் தகவலை காண்போம்...

"ஹன்டா வைரஸ் என்றால் என்ன?" அதுவும் 'கொரோனாவை' போல் 'பரவக்கூடியதா?...' அதன் 'அறிகுறிகள்' என்ன?... 'முழுமையானத் தகவல்...'

ஹன்டா வைரஸ் என்பதும் கொரோனாவைப் போன்று நுரையீரலைத் தாக்கும். ஃபுளூ காய்ச்சலுக்கு இருக்கும் அதே அறிகுறிகள் இந்த வைரஸ் தொற்றுக்கும் இருக்கும்.

துவக்கத்தில் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிவயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். 10 நாட்கள் கழித்து சளியுடன் இருமல், மூச்சுத்திணறல், நுரையீரலில் நீர் கோர்த்தல், குறைந்த ரத்த அழுத்தம், இருதயத்தின் செயல்பாட்டை குறைத்தல் ஆகிய அறிகுறிகள் தென்படும்.

உங்கள் வீட்டு அருகே, அலுவலகம் அருகே எலி தொல்லைகள் இருந்து, உங்களுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகலாம்.

இந்த வைரஸ் காற்றில் பரவாது. ஆனால், ஹன்டா வைரசால் தாக்கப்பட்ட எலியின்  மலம், சிறுநீர், எச்சில் ஆகியவற்றை துடைப்பத்தால் பெருக்கும்போது, அதில் இருக்கும் சிறிய துகள்கள் காற்றில் பறக்க வாய்ப்பு இருக்கிறது. அப்போது, அந்த துகள்களை சுவாசிப்பவர்களுக்கு ஹன்டா வைரஸ் வர வாய்ப்பு இருக்கிறது.

இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றாது என்று கூறப்பட்டாலும், அனைத்து நாடுகளுக்கும் இது பொதுவானது இல்லை என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வடக்கு அமெரிக்காவில் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவியதற்கான ஆதாரங்கள் உள்ளன.

இந்நோய் வராமல் தடுக்க பயன்படுத்தாத கட்டிடங்கள், கூடாரங்களை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் வீடு, அலுவலகங்களில் எலி வருவதை தவிர்க்க எலி மருந்து பயன்படுத்த வேண்டும்

கொரோனாவைப் போன்று ஹன்டா வைரஸ் மனிதரிடம் இருந்து மனிதனுக்கு தொற்றாது. காற்றிலும் பரவாது. ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எலியுடன் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே இந்த வைரஸ் தொற்றும். இது நேற்று, இன்று பிறந்த வைரஸ் அல்ல. காலம், காலமாக இருக்கிறது. ஆதலால் பயப்படத் தேவையில்லை.

CORONA, HANTA VIRUS, RAT, CHINA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்