'இத்தன பெருசா வளந்துட்டு, கப்பல் கிட்டவந்து விளாட்டு'.. வைரலாகும் திமிங்கலத்தின் செயல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடலுக்குள் இருந்து சிறுபிள்ளைத் தனமாக குஷியான திமிங்கலம் ஒன்று டைவ் அடித்து விளையாண்டுள்ள அற்புத நொடி கேமராவில் க்ளிக் ஆகி, இணையத்தில் பரவி வருகிறது.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது மொண்டெரெ வளைகுடா. ஒரு சிறிய கப்பலில் இருந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தவர் சற்றும் எதிர்பாராத வகையில் ஹம்பேக் வகையறா திமிங்கலம் ஒன்று கடலில் இருந்து வெளியே வந்து ஒரு பெரிய டைவ் அடித்து விளையாண்டுள்ளது.

சற்று தூரத்தில் கப்பலில் இருந்த புகைப்பட கலைஞர் ஒருவர் இதனை சரியான டைமிங்கில் புகைப்படம் எடுத்துவிட்டார். இந்த காலக்கட்டத்தில் கடலுக்குள் இருக்கும் சாலமன் வகை மீன்களை உண்ணும் நோக்கில், ஹம்பேக் வகையிலான திமிங்கலங்கள் அவ்வழியே வரும் என்றும்,  விருந்து உண்ணுவதற்கு முன், தயார் நிலையில் டைவ் அடிக்கும் இயல்புடைய இந்த திமிங்கலங்கள் கப்பலுக்கு அருகில் வந்து டைவ் அடிக்க வாய்ப்புள்ளதாக முன்னமே டக்ளஸ் என்பவர் கருதியுள்ளார்.

ஆம், இணையங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகும் இந்த புகைப்படம் டக்ளஸ் என்னும் புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படம்தான். எனினும் திமிங்கலம் விருந்துக்காக உலா வந்துள்ள இதே சீசனில்தான் மீனவர்களும் மீன் பிடிக்கச் செல்வார்கள் என்பதால், ஒரு போட்டி நிலவலாம் என்றும் தெரிகிறது.

WHALE, VIRALPHOTO, FISHING, SHIP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்