"எந்த நேரமும் வெடிக்கலாம்.. அது மட்டும் நடந்தா".. எச்சரிக்கும் நிபுணர்கள்.. உச்சகட்ட பரபரப்பில் மக்கள்.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்வகாரி எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நியூசிலாந்து நாட்டின் ப்ளென்டி விரிகுடாவில் இருக்கிறது வகாரி தீவு. இதனை ஒயிட் தீவு என்றும் அழைக்கின்றனர். ஆக்டிவ் எரிமலையாக இந்த தீவு கருதப்படுகிறது. அதாவது எந்த நேரத்திலும் வெடிக்க கூடிய எரிமலையாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடைசியாக இந்த எரிமலை கடந்த 2019 ஆம் ஆண்டு வெடித்துச் சிதறியது. அப்போது, அந்த தீவில் 47 சுற்றுலாவாசிகள் இருந்தனர். வெடிப்பில் காயமடைந்த 22 சுற்றுலாவாசிகள் உயிரிழந்தனர். அதில் சிக்கிக்கொண்ட மற்ற சுற்றுலாவாசிகள் மீட்பு படகு மற்றும் விமானம் மூலமாக நிலப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த எரிமலை மீண்டும் வெடிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
வகாரி எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கலாம் எனவும் ஒருவேளை வெடித்தால் அது மிகப்பெரிய அளவில் இருக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய எரிமலை நிபுணரும் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் வகாரி கண்காணிப்பு குழு உறுப்பினருமான ஷேன் க்ரோனின்," கடந்த 2019 ஆம் ஆண்டு வெடிப்புக்கு பிறகு சீஸ்மிக் நிலையங்களை கண்காணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், வகாரி எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கலாம். உள்பக்கம் இருக்கும் புதிய மேக்மா அல்லது வெளிப்பக்க அழுத்தம் என வெடிப்புக்கான சூழ்நிலையை கணிப்பது சவாலான காரியமாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, வகாரி எரிமலையின் எச்சரிக்கை நிலை 2 இல் உள்ளது. இது நியூசிலாந்தின் மற்ற செயலில் உள்ள எரிமலைகளை விட அதிகமாகும். கடந்த 2019 ஆம் ஆண்டு வகாரி எரிமலை வெடித்தபோது அதன் அளவு சிறியதுதான் என்றும், இனி அந்த எரிமலை வெடித்தால் அது மிகப்பெரிய அளவில் இருக்கும் எனவும் ஷேன் க்ரோனின் எச்சரித்திருக்கிறார்.
இதன் காரணமாக வகாரி எரிமலை அமைந்திருக்கும் பகுதியை முழு கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர் நிபுணர்கள். இது அருகில் உள்ள பிராந்திய மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்