23 வருஷத்துக்கு அப்பறம் இப்படி நடந்திருக்கு.. அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நியூசிலாந்தில் மிகப்பெரிய விண்கல் ஒன்று விழுந்திருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், அது விண்கல் தான் எனவும் இதனால் பாதிப்பு ஏதுமில்லை எனவும் அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "மொத்தமா 5000-க்கும் மேல.." பூட்டிய வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த போலீஸ்.. உள்ள என்ன தான் இருக்குன்னு பாத்தப்போ காத்திருந்த அதிர்ச்சி

நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் இருக்கும் வெலிங்டன் தீவை சேர்ந்த மக்கள் நேற்று வானில் விசித்திரமான, காட்சியை கண்டிருக்கிறார்கள். வானம் திடீரென கிழிந்து அதிவேகத்துடன் ஒரு பொருள் பூமியை நோக்கி வருவதை பார்த்ததாக பலர் தெரிவித்திருக்கின்றனர். இது அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியிருக்கிறது. இந்நிலையில் அது ஒரு விண்கல் தான் என அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

விண்கல்

விண்வெளியில் சூரியனை பிற கோள்கள், சூரியனை சுற்றிவருவதை போலவே விண்கற்களும் விண்வெளியில் பல்லாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து வருகின்றன. இவை சில சமயங்களில் புவியின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்டு புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைவதுண்டு. அப்படி பூமியின் வளமண்டலத்திற்குள் நுழையும் விண்கற்கள் காற்றில் அதிவேகத்துடன் உராய்வதால் தீப்பிடித்து வானிலேயே சாம்பலாகி விடுவதுண்டு. ஆனால், அவற்றிலிருந்து தப்பி பூமிப் பரப்பை அடையும் விண்கற்கள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.

சுமார் 1 மீட்டர் அகலத்தில் இருந்த இந்த விண்கல் மதியம் 1.52 மணியளவில் காணப்பட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் வானில் ஒளிப்பிழம்பை பார்த்ததாகவும், மெல்லிய சத்தத்தை கேட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒளிப்பிழம்பு

மாஸ்டர்டன் மற்றும் வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர்கள் தான் இதனை பார்த்திருக்கிறார்கள். இதுபற்றி பேசியுள்ள பொதுமக்கள்," வீட்டில் இருந்தபோது திடீரென சத்தம் கேட்டது. நேரம் செல்ல செல்ல சத்தம் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதனால் அச்சமடைந்த நாங்கள் வீட்டை விட்டு வெளியே வந்த போதுதான் வானத்தை கவனித்தோம். ஒளிப்பிழம்பு போல ஒரு பொருள் வானத்தை கிழித்துக்கொண்டு செல்வது போல அது இருந்தது" என்றனர்.

23 வருடம் கழித்து

நியூசிலாந்தின் வெலிங்டன் பகுதியில் கடைசியாக 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி, விண்கல் ஒன்று விழுந்தது. அதன்பிறகு 23 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் அதே பகுதியை சேர்ந்த மக்கள் விண்கல்லினை பார்த்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | இந்தியாவுலயே இப்படி ஒரு கோவிலை யாரும் கட்டுனதில்ல.. நாட்டையே திரும்பிப் பார்க்க வச்ச ஓய்வுபெற்ற ஆசிரியர்..!

WELLINGTON, WELLINGTON RESIDENTS, METEOR

மற்ற செய்திகள்