'வைரலாகும் ஆபத்தான சேலஞ்ச்'... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வேக்கம் சேலஞ்ச் என்ற பெயரில் ஆபாத்தான சவாலை பலரும் செய்து இணையதளத்தில் வீடியோவை பகிர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வைரலாகும் ஆபத்தான சேலஞ்ச்'... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி உள்ளது. மேலும், அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கிகி சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ்ச் போன்றவை பிரபலமான சேலஞ்ச்கள். அந்த வகையில், தற்போது வேக்கம் சேலஞ்ச் (Vacuum Challenge) என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

இதில் ஒரு பெரிய டஸ்ட் பின் பிளாஸ்டிக் பையில் ஒருவர் அமர்ந்து கொண்ட உடன், அந்த பைக்குள் வேக்கம் க்ளீனரின் பைப்பை விட வேண்டும். பின்னர் மற்றொருவர் வேக்கம் கிளீனரை ஆன் செய்கிறார். சிறிது நேரத்தில் பைக்குள் இருக்கும் காற்றை வெளியேற்றி, அந்த நபரின் உடலை பிளாஸ்டிக் பை இறுக்குகிறது.

வைரலாகி வரும் இந்த ஆபத்தான சவாலை பெரியவர்கள் முதல் சிறுவர், சிறுமியர் என பலரும் செய்து வருகின்றனர். பின்னர் வீடியோ எடுத்து அதனை பதிவிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VACCUMCHALLENGE, BINBAGCHALLENGE

மற்ற செய்திகள்