உங்க 'பையனோட' ஏன் சாப்ட்டீங்க?.. பெண்ணிற்கு 'பில்' அனுப்பிய கல்யாண வீட்டார்!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவா கல்யாண வீட்ல சாப்பிட்டு முடிச்சிட்டு நம்மளால முடிஞ்ச அன்பளிப்பையோ,பணத்தையோ மணமக்களுக்கு பரிசா கொடுத்து வாழ்த்திட்டு வருவோம். ஆனா வெளிநாட்ல நடந்த ஒரு கல்யாணத்துல சாப்பிட்டதுக்கு பொண்ணோட வீட்ல இருந்து சம்பந்தப்பட்டவங்களுக்கு பில் அனுப்பி இருக்காங்க.
இதுபத்தி ரெட்டிட் அப்படின்ற சமூக வலைதளத்துல பெண் ஒருத்தர் பகிர்ந்து கொண்ட தகவல் இப்போ வைரலாகிட்டு இருக்கு.
இதுபத்தி அந்த பெண்,''நானும் என்னோட 16 வயது மகனும் ஒரு கல்யாணத்துக்கு போய் இருந்தோம். கல்யாணம் முடிஞ்சதும் எல்லோரையும் சாப்பிட கூப்பிட்டாங்க. சாப்பிடுற இடத்துக்கு போனப்போ அங்க குழந்தைகளுக்கு, பெரியவங்களுக்கு அப்படின்னு தனித்தனியா சாப்பாடு இருந்தது.என் பையனுக்கு 16 வயசு அப்டிங்கிறதால அவனும் என்கூட உட்கார்ந்து சாப்பிட்டான்.உணவு நல்லா இருந்தது.சாப்பிட்டு வீட்டுக்கு வந்தோம்.
இரன்டு நாள் கழிச்சு பொண்ணு வீட்டுல இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்துச்சு.அதுல ஒரு பில் சேர்த்து அனுப்பி இருந்தாங்க.அதோட ஒரு குறிப்பும் இருந்துச்சு.அந்த கடிதத்துல,''நீங்க உங்க மகனோட கல்யாணத்துக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம். நாங்க குழந்தைகளுக்கு தனியா உணவு ஏற்பாடு செஞ்சு இருந்தோம். ஆனா உங்க பையன் பெரியவங்க சாப்பாட்டை சாப்பிட்டாரு.
இதனால கேட்டரிங் பண்றவங்க எங்ககிட்ட அதுக்கு பணம் வாங்கிட்டாங்க. அதனால நீங்க அந்த பில்ல எங்களுக்கு அனுப்பி வைங்கன்னு அப்படின்னு சொல்லி இருந்தாங்க. இதைப் பார்த்ததும் எனக்கு ஷாக் ஆகிடுச்சு. வயசு பத்தி அங்க எதுவும் சொல்லல. அதோட என் பையனுக்கு 16 வயசு ஆச்சு.அதனால தான் அவனை என்னோட சாப்பிட வச்சேன். கடைசில இப்படி பண்ணிட்டாங்கன்னு,''சொல்லி வருத்தப்பட்டு இருக்கார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பெற்றோருக்கு' எதிராக 'புகார்' கொடுத்த புது மாப்பிள்ளை'.. காரணத்தை கேட்டா அசந்துருவீங்க!
- 'திருமணம் ஆகி 2 மாசம்'.. 'கொட்டோ கொட்டுனு’.. மழை பெய்ததால்.. நடந்த 'விவாகரத்து' சம்பவம்!
- ‘கல்யாணத்த நிறுத்துங்க’.. தாலி கட்டும்போது கையில் குழந்தையுடன் வந்த பெண்..! சினிமா பாணியில் நடந்த பரபரப்பு..!
- 'இப்படியே இருந்தா கல்யாணம் பண்ண பொண்ணு கெடைக்காது'.. போலீஸ் கான்ஸ்டபிள் எடுத்த அதிரடி முடிவு!
- ‘திருமண நாளில் மாப்பிள்ளை செய்த காரியத்தால்’... 'மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’... ‘உறைந்துபோய் நின்ற உறவினர்கள்’...!
- ‘நம்பித்தானே வந்தோம்‘... ‘இதையே வேலையாக வைத்திருந்த இளைஞர்’... ’கண்ணீர்விட்ட பெண்கள்’!
- ‘சுத்தி பார்க்கலாம்னு ஆசையாப் போன’... ‘புதுமணத் தம்பதிக்கு மூன்றே நாளில்’... ‘நெஞ்சை உருக்கும் சம்பவம்’!
- ‘ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்த இளைஞர்’.. ‘திருமணமான 7வது நாளில்’.. ‘இளம் பெண்ணுக்கு நடந்த சோகம்’..
- 'பட்டுச்சேலை கட்டிட்டு வரேன்னு போன பொண்ணு'...'தவித்து நின்ற மணமகன்'...கடைசி நேரத்தில் நடந்த சோகம்!
- ‘மணமகனுக்கு நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘திருமணப் பத்திரிக்கை கொடுக்கச் சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்’..