"மிரட்டுனா பணியுற ஆளு நாங்க இல்ல..." '18 லட்சம் கோடி' வர்த்தகம் போனாலும் 'பரவால்ல...' சீனாவுக்கு 'கெத்து' காட்டிய 'நாடு...'
முகப்பு > செய்திகள் > உலகம்'ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் சீனாவின் மிரட்டல் மற்றும் வற்புறுத்தலுக்காக, ஒருபோதும் எங்கள் மதிப்பை விற்க தயாராக இல்லை,'' என, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து, மாட்டு இறைச்சி மற்றும் பார்லி ஆகியவற்றை, சீனா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. இதன் மூலம் சீனா, - ஆஸ்திரேலியா இடையே, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலம், ஆண்டொண்றுக்கு, 18 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் நடக்கிறது.
இந்நிலையில், 'கொரோனா' தொற்று விவகாரத்தில், சீனா அலட்சியமாக செயல்பட்டதால் தான், இன்று உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆஸ்திரேலியா சமீபத்தில் குற்றம்சாட்டியது.'இது தொடர்பாக, சர்வதேச விசாரணை தேவை' என, ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்தியது.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவை மிரட்டும் வகையில், மாட்டு இறைச்சி இறக்குமதிக்கு சீனாதடை விதித்தது. பார்லி இறக்குமதிக்கு, அதிக வரி விதிக்கப்பட்டது. மேலும், 'ஆஸ்திரேலியாவுக்கு சென்று படிப்பதை, சீன மாணவர்கள் தவிர்க்க வேண்டும்' என, சீனா தெரிவித்துள்ளது. சீன சுற்றுலா பயணிகளும், ஆஸ்திரேலியா செல்வதை தவிர்க்க வேண்டுமென, சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து, ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மோரிசனிடம், செய்தியாளர்கள் கேட்டபோது, ''நாங்கள் வெளிப்படையாக வர்த்தகம் மேற்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவர்கள். எனவே, தேவையற்ற மிரட்டல் மற்றும் வற்புறுத்தல்களுக்காக, எங்கள் மதிப்பை விற்க தயாராக இல்லை,'' எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சிக்கியது சீனாவின் வண்டவாளம்...' 'ஆகஸ்ட்லயே' அங்க அல்லு 'விட்டுருச்சு...' 'இதுல...' "நாங்கள் உண்மையை மறைக்கவே இல்லைன்னு..." 'நாடகம் வேற...'
- 'பின்னாடி' வழியா 'மீன்' உள்ள போயிடுச்சு... 'x ray' பார்த்து 'அரண்டு' போன 'மருத்துவர்கள்'... உக்காரும் போது 'பாத்து' உக்காரணும்!
- "இப்ப என்ன? இதானே வேணும்"!.. 'கொரோனாவால்' பாதிக்கப்பட்ட 'முதல் நோயாளி' தொடங்கி எல்லாத்தையும் 'போட்டு' உடைத்த 'சீனா'!
- 'சீனாவுக்கு' எதிராக திரண்ட '8 நாடுகள்...' 'ஆப்பு வைக்க' தயாரான 'புதிய கூட்டணி...' இனி சீனாவை இந்த நாடுகள் 'கேள்வி கேட்கும்...'
- "அட கொஞ்சம் அமைதியா இருங்கப்பா..." 'நீங்க வேற' சூழ்நிலை புரியாம 'ஆரம்பிக்காதிங்க...' 'போராட்டக்காரர்களிடம்' கெஞ்சும் 'பிரதமர்...'
- "ஒரு பிரதமர்ன்னு கூட பாக்காம..." "என்னயா இந்த வெறட்டு வெறட்டுற..." "இதெல்லாம் ஆஸ்திரேலியாவுல மட்டும் தான் நடக்கும்..."
- இப்படியே குத்தம் சொல்லிட்டு இருங்க... கடைசில உங்களுக்கு தான் 'ஆப்பு'...
- "இந்த சின்ன கூட்டத்த வெச்சுலாம்.. எங்களை ஒன்னும் பண்ண முடியாது!" - மீண்டும் கட்டையைப் போடும் சீனா!
- "சீனா நகர்த்தும் காய்களை இந்தியா முறியடிக்குமா?".. சத்தமின்றி பாகிஸ்தானில் வேலையைத் தொடங்கிய சீன அரசு!.. அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள்!
- 'சீனா நினைத்திருந்தால்...' 'வைரஸ் பரவல் குறித்த...' 'அதிர்ச்சியூட்டும்' உண்மைத் 'தகவல்கள்...' 'அம்பலப்படுத்திய' அசோசியேட்டட் 'பிரஸ்' நிறுவனம்...