"நாம அதுக்கு ஆப்போசிட்டா செய்வோம்!".. முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்ட விவகாரம்.. ‘உலகத் தமிழர்களின்’ உணர்வில் இடம்பிடித்த ‘கனடா’ மேயரின் ‘வாக்குறுதி!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

முள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதில் வேறு ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தருவதாக கனடா மேயர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அண்மையில் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக கனடாவாழ் தமிழ் சங்கத்தினர் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். ஈழப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக 2019ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுச் சின்னம் தான் இரண்டு வாரங்களுக்கு முன் இடிக்கப்பட்டது.

இதனை அடுத்து உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்கள் கொந்தளித்தனர். இது தொடர்பாக தமிழ்ச் சமூகம் கனடாவுக்கு செய்துள்ள நல்ல விஷயங்களுக்கு கைமாறு செய்யும் வகையில் கனடாவிலுள்ள ப்ராம்ப்டன் பகுதி மேயர் Patrick Brown இடிக்கப்பட்ட அந்த நினைவுச் சின்னத்துக்கு பதிலாக கனடாவில் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தரவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

ALSO READ: “7 மாசமா வெயிட் பண்ணிட்டோம்!.. இப்ப வேற வழி இல்ல”.. ‘டிக்டாக்’ செயலியின் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய பரபரப்பு மெயில்!

அத்துடன் ப்ராம்ப்ரன் நகர கவுன்சில் இலங்கையில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக கனடாவில் வேறு ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தரும் இந்த முடிவுக்கு ஏகமனதாக வாக்களித்துள்ளது.

இதன் பின்னர் தனது ட்விட்டரில் இது தொடர்பாக ட்வீட் பதிவிட்ட Patrick Brown, “இலங்கையில் நடந்த வரலாற்றை மூடி மறைக்க முயலும் நிலையில் அதை பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது!” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த ட்வீட்டில், “இலங்கையில் அவர்கள் நினைவுச்சின்னம் ஒன்றையும் வரலாற்றையும் இடிக்கும்போது அதற்கு எதிரான ஒன்றை நாம் கனடாவின் செய்வோம்.

உயிரிழந்தவர்கள் நினைவாக கனடாவில் நாம் வேறு ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்குவோம்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்