‘சரியாக மூடாத பாதாள சாக்கடை’.. ‘நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்’.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் 3 வயது குழந்தை பாதாள சாக்கடை குழியில் விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா ஷங்யீ நகரில் தந்தையுடன் சென்றுகொண்டிருந்த 3 வயது குழந்தை சாலையில் சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியில் காலை வைத்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக குழந்தை குழிக்குள் வி்ழுந்துள்ளது. இதனைக் கண்ட குழந்தையின் தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனை அடுத்து உடனடியாக குழிக்குள் கையை விட்டு குழந்தையை மேலே சாதூர்யமாக தூக்கி மீட்டுள்ளார். இந்த சம்பவத்தில் குழந்தை பெரிய காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இந்த சம்பவம் அங்கே இருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வீடியோ காட்சியை சீனா சென்ட்ரல் டெலிவிஷன் (CCTV) தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

CHINA, MANHOLE, BOY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்