FB-ல ஒரே ஒரு போஸ்ட் தான்.. காசு நிக்காம வந்துட்டே இருக்கு.. பெண் ஊழியருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வாடிக்கையாளர் பதிவிட்ட ஒரே ஒரு பேஸ்புக் பதிவால் பெண் ஊழியருக்கு 7 லட்ச ரூபாய் வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் IHOP என்ற உணவகம் இயங்கி வருகிறது. இதில் ஜாஸ்மின் காஸ்டிலோ என்ற பெண் சப்ளையராக பணியாற்றி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு ரீட்டா ரோஸ் என்ற வாடிக்கையாளருக்கு உணவு பரிமாறி உள்ளார். அப்போது அவர் ஜாஸ்மினுக்கு 20 அமெரிக்க டாலர்களை டிப்ஸாக கொடுத்துள்ளார். மேலும் ஜாஸ்மினின் குடும்ப சூழல் குறித்தும் விசாரித்துள்ளார். இதனை அடுத்து பேஸ்புக்கில் ஜாஸ்மின் குறித்து ரீட்டா ரோஸ் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், ‘நானும் எனது அம்மாவும் IHOP என்ற உணவகம் சென்றிருந்தோம். அங்கு எங்களுக்கு உணவு பரிமாறிய ஜாஸ்மின் என்ற ஊழியர் மிகவும் சிறப்பாகவும், கனிவாகவும் எங்களை நடத்தினார். அதே நேரத்தில் அவர் தொழில்முறை நேர்த்தியிலிருந்தும் தவறவில்லை. அதற்காக அவருக்கு 20 டாலர்கள் டிப்ஸ் கொடுத்தேன்.
இதை பெற்றுக்கொண்ட அவர், இந்த 20 டாலர்கள் எனக்கான பெரிய உதவி என கூறியிருந்தார். அப்போது இந்தப் பணியை செய்ய அவருக்கு விருப்பமில்லை என்றும் குழந்தைக்காகவும், குடும்பத்திற்காகவும் இந்த பணியை செய்து வருவதாக கூறினார். அதனால் உங்களால் முடிந்த உதவியை ஜாஸ்மினுக்கு செய்யுங்கள்’ என ரீட்டா ரோஸ் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு கீழே ஜாஸ்மினின் ‘கேஸ் அப்’ விவரங்களையும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவைப் படித்த பலரும் ஜாஸ்மினின் கேஸ் ஆப் செயலுக்கு அமெரிக்க டாலர்களை அனுப்பத் தொடங்கி உள்ளனர். 1, 2 என தொடங்கி தற்போது 10 ஆயிரம் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 7 லட்ச ரூபாய்) கடந்து சென்று கொண்டுள்ளது. இது குறித்து தெரிவித்த ஜாஸ்மின், ‘எனது போனில் உள்ள கேஸ் அப் செயலியின் நோட்டிஃபிகேஷன் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. உதவிய அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இளைஞர்களுடன் ‘டேட்டிங்’.. காலேஜில் பல லட்சம் ஸ்காலர்ஷிப்.. மகளையே ஏமாற்றி அதிர வைத்த அம்மா..!
- 'உலகத்தை' ஆளப்போகும் Metaverse...! - கூகுளும், பேஸ்புக்கும் உருவாக்கப் போகும் மாய உலகம்!
- 6 வருஷ 'லவ்' சார்...! 'எனக்கு 21 வயசு பொண்ணுலாம் தேவையில்ல...' '83 வயது' மூதாட்டியுடன் உயிருக்கு உயிராக காதல்...! - இந்த காலத்துல 'இப்படியும்' ஒரு லவ்வா...?
- VIDEO: 'கம்பியூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கீங்க...' 'நல்ல இங்கிலிஷ் பேசுறீங்க...' அப்புறம் ஏன்மா உங்களுக்கு இந்த கஷ்டம்...? - 'வாழ்க்கை' எங்க கொண்டு வந்து விட்டுடுச்சு பார்த்தீங்களா...!
- நான் 'அத' யூஸ் பண்ண தொடங்கின உடனே... என் கன்னத்துல 'பளார்'னு ஒண்ணு போடணும் சரியா...? அதுக்கு தான் உனக்கு சம்பளம்...! - 'வைரல்' வீடியோவிற்கு 'எலான் மஸ்க்' ரியாக்சன்...!
- VIDEO: இதெல்லாம் ரொம்ப மோசம்.. அவுட்டில் இருந்து தப்பிக்க இப்படியா பண்ணுவீங்க.. சர்ச்சையை கிளப்பிய சம்பவம்..!
- 'ஃபேஸ்புக்' குழுமத்திற்கு 'புதிய பெயரை' அறிவித்தார் மார்க் ஜுக்கர்பெர்க்...! - ஏன் 'இப்படி' ஒரு பெயர வச்சார்...?
- 'உண்மையிலே என்ன தான் நடக்குது'?... 'கோபத்தின் உச்சிக்கே சென்ற வாடிக்கையாளர்கள்'... மீண்டும் மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக்!
- பாவம் அந்த மனுஷன், அவரே 'ஃபீல்' பண்ணிட்டு இருக்காரு...! இந்த நேரத்துல 'இப்படியா' பண்றது...? - ஃபேஸ்புக்கை சீண்டிய 'ட்விட்டர்' சிஇஓ...!
- 'தாயா, பிள்ளையா பழகிட்டு இருக்கோம்'... 'என் மேல இப்படி ஒரு அபாண்டமான பழிய போடுறீங்க'... உடைந்து நொறுங்கிய மார்க் ஜூக்கர்பர்க்!