அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி.. பெரும் எதிர்பார்ப்பில் இந்தியர்கள்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க வாழ் இந்தியரான விவேக் ராமசாமி வரவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் வசித்துவரும் இந்தியர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஆர்டர் செஞ்ச ஐ போன் வாங்க காசில்ல".. டெலிவரி செய்ய வந்த ஊழியருக்கு இளைஞரால் நேர்ந்த கொடூரம்.. கதிகலங்கிய கர்நாடகா!!

அமெரிக்காவில் வரும் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் தேர்தலை சந்திக்கப்போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இருப்பினும் அந்த கட்சியில் அங்கம் வகிக்கும் விவேக் ராமசாமி தேத்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதனால் அமெரிக்காவில் வசித்துவரும் இந்தியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

விவேக் ராமசாமி சிறுவனாக இருந்தபோது அவருடைய குடும்பம் அமெரிக்காவில் குடியேறியுள்ளது. ஓஹியோ மாகாணத்தில் வசித்து வந்த இவர் அங்கேயே பள்ளி, கல்லூரிகளை முடித்திருக்கிறார். அதன் பின்னர் சுகாதார மற்றும் மென்பொருள் துறையில் கால்பதித்தார். தற்போது சிறந்த தொழில்முனைவோர்களில் ஒருவராகவும் விவேக் ராமசாமி அறியப்படுகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் தனது முடிவு பற்றி அவர் பேசுகையில், "இலட்சியங்களுக்கு உயிர்கொடுக்கவே இந்த தேர்தலில் போட்டியிட இருக்கிறேன். இது வெறும் அரசியல் பிரச்சாரம் அல்ல. இது அடுத்த தலைமுறை அமெரிக்கர்களுக்கு ஒரு புதிய கனவை உருவாக்குவதற்கான ஒரு கலாச்சார இயக்கமாகும். சிறந்து விளங்குவதற்கான நம்பிக்கை பற்றியது இது. நிறத்தின் அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் உங்களது பங்களிப்பின் அடிப்படையில் இதன் வெற்றி அமைந்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

மேலும், மெரிட்டின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் விவேக் பேசியிருக்கிறார். முன்னாள் தென் கரோலினா ஆளுநரும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதருமான நிக்கி ஹேலி வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். குடியரசு கட்சியை சேர்ந்தவரான நிக்கி ஹேலியின் அறிவிப்பு வெளிவந்த சில தினங்களில் விவேக் ராமசாமி தானும் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | திருமண தேதி என்ன?.. திருதிருன்னு முழிச்ச கணவன்.. கோபத்துல மனைவி செஞ்ச பகீர் காரியம்..!

VIVEK RAMASWAMY, INDIAN ORIGIN, CEO, US PRESIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்