'இது மட்டும் சென்னைக்கு வந்த சும்மா டக்கரா இருக்கும்'... 'சில நிமிடங்களில் போயிடலாம்'... அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ரிச்சர்ட் பிரான்சன்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நகரங்களை நிமிடங்களில் இணைக்கும் எதிர்கால போக்குவரத்து தொழில்நுட்பத்தை ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் எம்பயர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இனிமேல் எதிர்கால போக்குவரத்து என்பது மிகவும் எளிதாகவும், எளிதில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் செல்லும் வகையில் தான் இருக்கப் போகிறது. அந்த வகையில் எதிர்கால தொழில்நுட்பமான ஹைப்பர்லூப் பாட்கள், மணிக்கு 1,078 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிடம் போன்ற குழாய் அமைப்பில் 28 பேர் வரை அமர்ந்து பயணிக்கக் கூடிய வகையிலான பாட்கள் எந்தவித இணைப்புமின்றி முழுமை யாக மேக்னடிக் லெவிடேஷன் என்கிற மின் காந்தவியல் அடிப்படையில் இயங்கக் கூடியதாகும்.

இந்த தொழில் நுட்பமானது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் 21-ம் நூற்றாண்டுக்கான போக்குவரத்து தொழில்நுட்பமாக இது இருக்கும் என ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் எம்பயர் நிறுவனம் கூறியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் எம்பயர் நிறுவனம், பல ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியைச் செய்து வருகிறது.

இந்த பாட்கள் ரயில் பெட்டிகளைப் போல ஒன்றோடொன்று இணைக்கப்பட்டது போன்று தோற்றமளிக்கும். ஆனால் அப்படி இல்லாமல் ஒன்றையொன்று முறையாகப் பின் தொடர்ந்து செல்லும் வகையில் இதன் தொழில் நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தேவையின் பொருட்டு பாட்கள் இயக்கப்படும். எல்லாவற்றையும் இயக்கவேண்டிய அவசியம் இருக்காது. இதனால் அவை ஒவ்வொன்றும் சென்று சேர வேண்டிய இடத்துக்கு நேரடியாகச் சென்று சேர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர்லூப் பாட்களின் சோதனை ஓட்டங்கள் வெற்றியடைந்ததாகவும், இனி வணிகத்துக்கான தயாரிப்புகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் விர்ஜின்நிறுவனம் கூறியுள்ளது.

சென்னை போன்ற வாகன நெருக்கம் அதிகமாக உள்ள நகரங்களுக்கு இந்த தொழில்நுட்பம் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் போக்குவரத்துத் துறை சார்ந்த பொறியாளர்கள் இதன் தொழில்நுட்பம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்