அது ஏன் கூகுள் மேப்ல இப்படி தெரியுது.? மர்ம வீடா..? நெட்டிசன்களை அலறவைத்த வரலாறு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டை கூகுள் மேப்பில் ப்ளர் (Blur) ஆகி இருப்பது குறித்து பலரும் வைரலாக பேசிவருகின்றனர்.

Advertising
>
Advertising

கூகுள் மேப்

புதிய பாதைகளை கண்டறிவது நம்முடைய வாழ்க்கையை எப்போதும் சுவாரஸ்யமாக மாற்றும். அப்படியான நெடுந்தூர பயணங்களின் போது பாதைகளை கண்டறிய ஆதிகாலம் முதலே மனிதன் புவியியல் வரைபடத்தை பயன்படுத்தி வந்தான். டெக்னாலஜி துறையில் மனித குலம் முன்னேற முன்னேற நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையும் அதற்க்கு ஏற்றாற்போல மாறின. அந்த மாற்றத்தின் விளைவாக தற்போது கூகுள் மேப் என்னும் டிஜிட்டல் வழிகாட்டி கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த மேப்பை பயன்படுத்திவருகின்றனர். உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள இடங்களை விரல் அசைவில் நம்மால் காணவும் இது வழிவகுக்கிறது. சாலைகளை மட்டுமல்லாது தெருக்கள் மற்றும் வீடுகளையும் நம்மால் இந்த தொழில்நுட்பம் மூலமாக காண முடியும்.

ஆனால், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் புறநகர் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றை மட்டும் நம்மால் கூகுள் மேப் மூலமாக பார்க்க முடியாது. காரணம், அது கூகுள் மேப்பில் மங்கலாக தெரிகிறது.

என்ன காரணம்?

இந்த மர்ம வீட்டிற்கு சொந்தக்காரர் ஏரியல் காஸ்ட்ரோ என்பவர் தான். 1992 ஆம் ஆண்டு முதல் இந்த வீட்டில் வசித்துவந்த காஸ்ட்ரோ கடந்த 2002, மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் 3 பெண்களை கடத்தி தனது வீட்டிற்குள் அடைத்து வைத்திருக்கிறார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட காஸ்ட்ரோவிற்கு 1000 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது அமெரிக்க நீதிமன்றம். தண்டனை காலத்தின்போது அவருக்கு பரோல் வழங்கப்படாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

இடிக்கப்பட்ட வீடு

இதனைத் தொடர்ந்து, ஏரியல் காஸ்ட்ரோ தங்கியிருந்த வீட்டை நகர நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கியது. இருப்பினும் வீடு இருந்த இடத்தை தொடர்ந்து கூகுள் மேப்பால் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு மங்கலாக தெரிகிறது இந்த இடம். குறிப்பிட்ட இடங்களை இப்படி மறைப்பது கூகுள் மேப்பில் புதிதல்ல.

இதுபோன்ற குற்றப் பின்னணி, சர்ச்சையான இடங்கள் சில கூகுள் மேப்-பில் ஏற்கனவே பளர் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

GOOGLEMAP, HIDDENHOUSE, USA, கூகுள்மேப், மர்மவீடு, அமெரிக்கா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்