ரஷ்யா - உக்ரைன் போர் பதட்டம்: வானில் 'ரிலாக்ஸ்' என்ற வடிவில் சென்ற விமானம்.. வெளிவந்த உண்மை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் மால்டோவா நாட்டின் விமானம் ஒன்று வானில் 'ரிலாக்ஸ்' என்ற வடிவில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

கடந்த சில மாதங்களாகவே ரஷ்யா - உக்ரைன் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், எல்லைப் பதற்றம் தற்போது உச்சம் தொட்டிருக்கிறது. உக்ரைன் எல்லையில் சுமார் 1,30,000 வீரர்களைக் குவித்திருக்கிறது ரஷ்யா. அதோடு, எல்லையிலிருக்கும் ரஷ்ய ராணுவ வீரர்கள் தீவிரப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் எந்த நேரமும் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூளும் சூழல் நிலவிவருகிறது. ரஷ்யா, "போர் தொடுக்கும் எண்ணமில்லை" என மறுத்து வந்தாலும்,  அமெரிக்காவைச் சேர்ந்த உளவு அமைப்புகள் இரு நாடுகளுக்குமிடையே போர் நிகழ்வது உறுதி என தெரிவிக்கின்றன.

ரஷ்யா - உக்ரைன் எல்லையில் பதற்றம்

இந்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டு எல்லையில் குவித்து வைத்திருந்த 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களில் சில குழுவினரை தங்கள் நாட்டு முகாம்களுக்கே திருப்பி அழைத்துக்கொண்டது. மேலும், இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த ராணுவத்தின் ஒரு பகுதியினர் உக்ரைன் எல்லையில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்றது ரஷ்யா. ஆனால் அதற்கான அறிகுறிகள் இதுவரை தெரியவில்லை என நேட்டோ தெரிவித்துள்ளது. மேலும் படை வீரர்களை திருப்பி அனுப்புவதாக கூறி விட்டு மேலும் படைகளை குவித்து வருவதாக தவறாக வழி நடத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் எல்லையில் 'ரிலாக்ஸ்'

சுமார் 7,000 வீரர்கள் 48 மணி நேரத்திற்குள் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சமாதானம் என்று வெளியில் கூறிவிட்டு படைகளை எல்லையில் குவிப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதற்கு கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் - ரஷ்ய எல்லையில் பதட்டம் நீடித்து வரும் நிலையில்,  மால்டோவா நாட்டின் விமானம் ஒன்று வானில் 'ரிலாக்ஸ்' என்ற வடிவில் சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  உக்ரைன் நாட்டிற்கு அருகே உள்ள மால்டோவா நாட்டின் தேசிய விமான நிறுவனம் ஏர் மால்டோவாவின், பயணிகள் விமானம் ஒன்று மால்டோவா நாட்டின் தலைநகரான கிஷினேவில் இருந்து 'ரிலாக்ஸ்' (Relax) என்ற என்ற ஆங்கில வார்த்தையின் வடிவப் பாதையில் சென்றது.

உண்மயான காரணம் என்ன?

அந்த வீடியோவை 'பிளைட் ரேடார்' என்ற விமானப் போக்குவரத்து கண்காணிப்பு இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்தது. இந்த வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போர் பதற்றத்தை தணிக்கும் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டது.  பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கினர். உண்மையில் அந்த விமானம் ஒரு வானொலி நிலையத்திற்கான விளம்பரத்திற்காக அவ்வாறு செய்துள்ளது.

ரேடியோ ரிலாக்ஸ் மால்டோவா என்ற அந்த வானொலி நிறுவனத்தின் தொடக்கத்தை வித்தியாசமாக மேற்கொள்ளும் முயற்சியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தலைநகர் கிஷினேவில் இருந்து மாலை 4.12 மணிக்கு கிளம்பிய அந்த விமானம் ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் வானில் ரிலாக்ஸ் என்ற வடிவில் பயணம் செய்து 5.50 மணிக்கு மீண்டும் கிஷினேவில் தரையறங்கியது.

RUSSIA, UKRAINE, RELAX, VIRAL PHOTO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்