“ஹாலிவுட் படங்களில் மட்டுமே பரவசப்படுத்திய சூப்பர் ஹீரோக்கள்.. இனி நிஜத்திலும்!”.. ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தொழில்நுட்ப சாதனை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனைச் சேர்ந்த கிராவிட்டி எனும் தனியார் நிறுவனம் மனிதனை பறக்க வைக்கும் சூப்பர் ஜெட் ஆடைகளை உருவாக்கி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

ஹாலிவுட் திரைப்படங்களில் பறக்கும் கவசங்களை அணிந்து மனிதர்களை காப்பாற்றும் சூப்பர் மனிதர்களை பார்த்திருப்போம். அவ்வகையில் ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றவும் எதிரிகளை பந்தாடும் உருவாக்கப்பட்ட அயர்ன்மேன் போன்ற கதாபாத்திரங்களும், அதேபோல் அந்த கதாபாத்திரங்களின் ஆடைகளும் பிரபலம். அவர்கள் தங்களது கவச உடையை அணிந்து கொண்டு வானில் பறந்துசென்றுதான் மக்களை காப்பாற்றுவர்.

இப்படி திரையில் மட்டுமே நாம் பார்த்து பரவசப்பட்ட மனிதனை பறக்க வைக்க கூடிய சூப்பர் ஜெட் ஆடைகளை உருவாக்கி அந்த கனவை நனவாக்கி உள்ளது பிரிட்டனைச் சேர்ந்த கிராவிட்டி நிறுவனம். இதன் ஒரு பகுதியாக சூப்பர் ஜெட் ஆடை அணிந்த ஒருவரை வைத்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது போன்ற பரிசோதனை முயற்சிகளை மருத்துவக் குழுவுடன் இணைந்து மேற்கொண்ட கிராவிட்டி நிறுவனம் அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

அதன்படி உயரமான மலைப்பகுதி ஒன்றில், 10 வயது சிறுமி சிக்கிக் கொண்டது போல தகவல் வந்ததையடுத்து சூப்பர் ஜெட் ஆடையை அணிந்து கொண்ட மருத்துவர் 90 வினாடிகளில் பறந்தபடி பயணித்து சிறுமியை காப்பாற்றி உள்ளார்.
இந்த ஆடையில் கைகளில் உள்ள இரண்டு இன்ஜின்கள் திசைகளை மாற்றுவதற்கும், முதுகில் உள்ள ஒரு இன்ஜின் பறக்கவும் உதவுகிறது. வேகத்தை மிக எளிதாக கட்டுப்படுத்தும்படியாக உருவாக்கப்பட்ட இந்த ஆடை சில மணி நேரங்கள் கடந்து பயணிக்க வேண்டிய தூரத்தை சில நொடிகளிலேயே பயணிக்க உதவுவதாக கூறுகிறார்கள்.

அப்படித்தான் இந்த சோதனையிலும் 25 நிமிடங்கள் கடந்து செல்லவேண்டிய ஒரு இடத்திற்கு இந்த ஆடையை அணிந்த மருத்துவர்  90 நொடிகளில் கடந்து சென்றிருக்கிறார் என்றும், இந்த ஆடையை அணிந்து கொண்டு 12,000 அடி உயரம் வரை பறக்க முடியும் என்றும் இந்த ஆடையை தயாரித்த கிராவிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த சோதனை வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்