'நிம்மதியாவே இருக்க முடியாதா'...'புதுசா கிளம்பியிருக்கும் தலைவலி'... விழி பிதுங்கி நிற்கும் சீனா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணம், தற்போது அதன் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் அங்கு மக்கள் வன்முறையில் ஈடுபடுவதால் சீனாவிற்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனாவா வைரஸின் பாதிப்பு உலகம் முழுவதும், பல நாடுகளை முடக்கி போட்டுள்ளது. ஹூபே மாகாணத்தில் ருத்திர தாண்டவம் ஆடிய கொரோனா சீனாவையே ஆட்டம் காண வைத்து விட்டது. ஒருகட்டத்தில் வைரஸ் தீவிரமாகப் பரவி, மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். அதன்பின்னர் ஊரடங்கு உத்தரவு மற்றும் மருத்துவர்களின் தீவிர முயற்சியினால் அங்கு வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது ஹூபே மாகாணத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதால் 2 மாதங்களுக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சாலைகளில் நடமாடத் தொடங்கியுள்ளார்கள். போக்குவரத்தும் தற்போது தொடங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி மக்கள் தற்போது, சாரை சாரையாக ஹூபே மாகாணத்திலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளார்கள். அது தான் தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மக்கள் கூட்டம் பேருந்து மற்றும் ரயில்களில் அலைமோதுகிறது.

இதையடுத்து போலீசார் அதனைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சாலைகளைத் திறந்து வெளி மாநிலங்களுக்குச் செல்ல அனுமதிக்கும்படி மக்கள் வலியுறுத்துவதால் பிரச்சனை வெடித்துள்ளது. ஹூபே மாகாணத்துடன் ஜியாங்சி மாகாணத்தை இணைக்கும் பாலத்திலும் மோதல் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோகள் வெளியாகி உள்ளன.

கொரோனாவாவின் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல வெளியே வரும் சீனாவிற்கு, தற்போது மக்கள் வன்முறையில் ஈடுபடுவது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

CORONA, CORONAVIRUS, VIOLENCE, COVID-19, CHINA, HUBEI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்