“பிசியா போய்ட்டு இருந்த நியூஸ் லைவ்”... "'Shelf'ல புத்தகத்துக்கு நடுவுல என்னது அது?..." திடீரென வைரலான 'புகைப்படம்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொற்று காரணமாக, மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் பள்ளி, கல்லூரி வகுப்புகள் மற்றும் அலுவலகம் தொடர்பான சந்திப்புகள் எல்லாம் வீடியோ கால் மூலமாக நிகழ்ந்து வருகிறது.

இப்படி பல விஷயங்கள் ஆன்லைன் மூலம் பலர் முன்னிலையில், நிகழ்ந்து கொண்டிருக்கும் போது சில விஷயங்கள் சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பதுமில்லை. சமீபத்தில், எவட்டி அமோஸ் (Yvette Amos) என்ற பெண் ஒருவர், லைவ் வீடியோ மூலம் பிபிசி வேல்ஸ் (BBC Wales) என்ற சேனலிற்கு பேட்டியளித்துக் கொண்டிருந்துள்ளார்.

வைரஸ் தொற்று மற்றும் வேலையிழப்பு ஆகியவற்றின் மோசமான விளைவுகள் குறித்து அமோஸ் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவரது அருகே அமைந்திருந்த புக் செல்ஃப் மீது இருந்த பொருள் ஒன்று நெட்டிசன்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது. இரண்டு அடுக்கு செல்ஃபில் பல புத்தகங்கள் இருந்த நிலையில், அதன் நடுவே செக்ஸ் பொம்மை (பிளாஸ்டிக் ஆண்குறி) ஒன்று இருந்துள்ளது.

டிவி நேரலையில் பேசிய பெண்ணின் பின் இப்படி ஒரு பொருள் இருந்தது குறித்து நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் அது செக்ஸ் பொம்மை இல்லை என்றும், ஏதேனும் கலைப்பொருளாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் சிலர், அவர் அதனை வேண்டுமென்றே வைத்திருக்கலாம் என்றும், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர் பெரிதாக  எடுத்துக் கொள்ளவில்லை என்பதால் அப்படி செய்திருக்கலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.









 

கொரோனா தொற்று காலம் முதல் இப்படி ஆன்லைன் மூலம் நடைபெறும் அரசியல் மற்றும் நிர்வாக வீடியோ சந்திப்புகளில் பல சர்ச்சை சம்பவங்கள் சிக்கி பரபரப்பை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்