'அன்று' அமெரிக்காவுக்கு எதிராக 'தீரத்துடன்' போரிட்ட 'வியட்நாம்'... 'இன்று' கொரோனாவுக்கு எதிரான 'போரில்...' 'அமெரிக்காவுக்கு' உதவும் 'நண்பனாக களத்தில்...' 'மாறும் வரலாறு! மாறாது மனிதம்...!'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1955ஆம் ஆண்டு வியட்நாம் போரில் அமெரிக்காவின் தலையீட்டால் ஏராளமான வியட்நாம் மக்கள் உயிரிழந்தனர். ஆனால் இன்று கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவுக்கு வியட்நாம் அரசு மாஸ்க் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பி உதவியிருப்பது உலக நாடுகளால் பாராட்டப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. அங்கு வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 23,649 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மாஸ்க், மருந்து, சோதனை கருவிகள் என்று பலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்தியாவிடம் இருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை சமீபத்தில் அமெரிக்கா பெற்றது. இதேபோல், சீனாவிடம் இருந்து மருத்துவக் கருவிகளையும், மாஸ்க்குகளையும் ஏராளமாக ஆர்டர் செய்து பெற்று வருகிறது. உலகத்தின் பல நாடுகளிடமும் இதற்காக அமெரிக்கா ஆர்டர் கொடுத்துள்ளது.

இந்நிலையில், குட்டி நாடுகளில் ஒன்றான வியட்நாம், அமெரிக்கா படும் கஷ்டத்தை பார்த்து அதற்கு தானாக முன்வந்து உதவியுள்ளது. கடந்த 9ம் தேதி 5 லட்சம் மாஸ்குகளையும், பாதுகாப்பு  உடைகளையும் வியட்நாம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், வரும் சனிக்கிழமை 4.5  லட்சம் மாஸ்குகள் மற்றும் பாதுகாப்பு உடைகளை அனுப்புவதாக வியட்நாம் தெரிவித்துள்ளது.

1955ல் வியட்நாம் போரின்போது, அமெரிக்காவால் வடக்கு வியட்நாம் நாசம் செய்யப்பட்டது. அங்கு ஏராளமானோர் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். ஆனால், இறுதியில், அமெரிக்கா ஆதரித்த தெற்கு வியட்நாமை, சீனா, ரஷ்யா ஆதரவுடன் வடக்கு வியட்நாம் வீழ்த்தியது. அதையெல்லாம் மனதில் கொள்ளாமல், உலக நாடுகள் வியந்து பாராட்டும்படி இப்போது வியட்நாம் அமெரிக்காவுக்கு உதவி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்