‘காற்றில் வேகமாக பரவும் வைரஸ்’!.. ‘எங்க நாட்டுல புதிய உருமாறிய கொரோனா தென்பட்டிருக்கு’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காற்றில் வேகமாக பரவும் புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் வியட்நாம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பல வகையில் உருமாற்றம் அடைந்துள்ளது. மியூட்டேஷன் என்று அழைக்கப்படும் இந்த மாற்றம், கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் இருந்து இன்னொருவரின் உடலுக்கு செல்லும் போது ஏற்படும் மாற்றம் ஆகும். கொரோனாவின் ஸ்பைக் புரோட்டீன், அதன் ஆர்என்ஏ என்று ஒவ்வொரு விஷயமும் மியூட்டேஷனில் மாற்றம் அடைய வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு முறை கொரோனா வைரஸ் இப்படி மியூட்டேட் ஆகும் போதும் புதிய வேரியண்ட் உருவாகிறது. இதுவரை பல வேரியண்ட்கள் இப்படி உருவாகி உள்ளன. ஆனால், இதில் 10-20 வேரியண்ட்கள் மட்டும் மக்களுக்கு அதிகமாக பரவி வருகிறது. B.1.222, B.1.619, D614G, B.1.1.7 என்று நிறைய வேரியண்ட்கள் இந்தியாவிலும், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் அதிகம் பரவியது.

இந்த நிலையில் வியட்நாமில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகை வைரஸ் மற்றும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகை வைரஸின் கூட்டு என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காற்றில் வேகமாக பரவும் திறன் கொண்டது என்று வியட்நாம் சுகாதாரத்துறை அமைச்சர் நுயேன் தன் லாங் (Nguyen Thanh Long) தெரிவித்துள்ளார்.

வியட்நாம் நாட்டில் இதுவரை மொத்தம் 6,856 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 47 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அங்கு உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருமாறிய கொரோனா குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்