‘அசுர வேகத்தில் வந்த ரயில்முன்’ காரில் மயங்கிக் கிடந்த ஓட்டுநர்.. ‘நொடியில் காவலர் செய்த காரியம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் மயங்கிக் கிடந்தவரை காவலர் ஒருவர் ரயில் மோதுவதற்கு ஒரு நொடி முன்பு காப்பாற்றியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள உதாஹ் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இருட்டில் விளக்குகள் எரிந்தபடி கார் ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. அப்போது அந்த வழியாக காரில் வந்த காவலர் ஒருவர் எதிரே ரயில் வந்துகொண்டிருப்பதைப் பார்த்து உடனடியாக இறங்கிச் சென்று பார்த்துள்ளார். அப்போது அந்தக் காரின் ஓட்டுநர் உடல்நலக் குறைவால் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அதற்குள் ரயில் அருகில் வர அந்தக் காவலர் கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்தவரை வெளியே இழுத்துக் காப்பாற்றியுள்ளார். அடுத்த நொடி அசுர வேகத்தில் வந்த ரயில் காரை மோதித் தூக்கி வீசும் காட்சிகள் காவலரின் காரில் இருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. ட்விட்டரில் இந்த வீடியோவை உதாஹ் காவல்துறை பதிவிட தக்க சமயத்தில் துணிச்சலுடன் செயல்பட்ட அந்தக் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

 

US, UTAH, POLICE, OFFICER, TRAIN, CAR, ACCIDENT, SAVE, HIT, MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்