Video : 'அந்தரத்தில் பாராசூட்டை திறக்க முடியமல் திணறிய இளைஞர்'... 'திடீரென வந்த 'கடவுளின் கை'...சிலிர்க்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அந்தரத்தில் பாராசூட்டை திறக்க முடியாமல் இளைஞர் ஒருவர் தவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்கை டைவிங் என்பது வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். இது ஒரு திர்லிங்கான அனுபவத்தைக் கொடுக்கும். ஸ்கை டைவிங் செய்பவர்கள் ஒரு ஒரு குறிப்பிட்ட உயரத்தில் விமானத்திலிருந்து குதித்து சில அசைவுகளைச் செய்வார்கள். பின்னர் தாங்களாகவே பாராசூட்டை திறந்து பாதுகாப்பாகத் தரைக்குத் திரும்புவார்கள். இதைச் செய்ய முறையான பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்கள், ஒரு திரில் அனுபவத்திற்காக இதைச் செய்வது உண்டு. அப்போது ஸ்கை டைவிங் பயிற்சியாளர் உடன் மட்டுமே குதித்து அந்த அனுபவத்தைப் பெற முடியும். நாம் மட்டும் தனியாகச் செய்ய வேண்டும் என்றால் அதற்கான பயிற்சியை எடுத்துக் கொண்டு மட்டுமே தனியாகச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் ஈரானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்கை டைவிங் செய்வதற்காக விமானத்திலிருந்து கீழே குதிக்கிறார். தனியாகக் கீழே குதித்த அந்த இளைஞர் கீழே குதித்த சில நிமிடங்களில் தனது பாராசூட்டை திறக்க முயற்சி செய்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த இளைஞரால் பாராசூட்டை திறக்க முடியவில்லை.

என்ன நடக்குமோ என்ற பதற்றம் தொற்றி கொண்ட நிலையில், கடவுளைப் போல வந்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர், அந்த இளைஞரின் பாராசூட்டை திறக்க உதவி செய்கிறார். பின்னர் இருவரும் பாதுகாப்பாக தரைக்கு வந்து சேர்ந்தார்கள்.

இதனிடையே எனது பாராசூட்டை திறந்தது நிச்சயம் கடவுளின் கை தான் என, தான் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் அந்த இளைஞர். அந்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் அந்த நேரத்தில் எனக்குக் கடவுளைப் போலத் தான் தோன்றினார் என உருகியுள்ளார் அந்த இளைஞர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் அந்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் தக்க நேரத்தில் செய்த உதவியைப் பாராட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்