இயற்கையின் இன்னொரு முகம்.. 30 நிமிஷத்துல இடத்தையே தலைகீழா புரட்டிப்போட்ட புயல்.. மிரள வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வீசிவரும் இயான் புயலில் சாலை தடம் தெரியாத அளவு மாறும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இயான் புயல்
அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டிருந்த இயான் புயல் கடந்த செவ்வாய்க்கிழமை கியூபாவை தாக்கியது. இதனால் அந்நாட்டின் மின்கட்டுமானம் மொத்தமாக சேதமடைந்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் கடுமையான மழைப்பொழிவு ஒரு பக்கமும், அதிவேக புயல்காற்று ஒருபக்கமும் போட்டு புளோரிடாவை வதைத்து வருகிறது.
இந்த இயான் புயல் அமெரிக்கா சந்தித்த மோசமான புயல்களில் ஒன்று என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். புளோரிடாவில் புயல் காரணமாக மணிக்கு 245 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகிறது. இதனால் சுமார் 2 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக 2.5 மில்லியன் மக்கள் வெளியேறும்படி நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுவரையில் 20 பேரை காணவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
திகைக்க வைக்கும் வீடியோ
இந்நிலையில், சமூக வலைதளங்களில் எங்கு நோக்கினும் இயான் புயல் குறித்த செய்தியாகவே இருக்கின்றன. மேலும், மக்கள் தங்களுடைய இடத்தில் நேர்ந்திருக்கும் பாதிப்பு குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், புளோரிடாவின் Sanibel Island பகுதியில் சாலை புயலால் பாதிக்கப்பட்ட விதம் குறித்து வீடியோ ஒன்று விளக்குகிறது. 30 நிமிடங்களில் சாலை எவ்வாறு மாறுகிறது? என்பதை அந்த வீடியோ உணர்த்துகிறது.
மற்றொரு வீடியோவில், கடும் காற்றில் மரங்கள் மற்றும் வீடுகள் தாக்கமடைவதை பார்க்க முடிகிறது. அதேபோல. Fort Myers பகுதியில் சுறா ஒன்று வலம்வரும் வீடியோவும் காண்போரை திகைக்க வைத்திருக்கிறது.
எச்சரிக்கை
தேசிய வானிலை சேவை இயக்குனர் கென் கிரஹாம் இதுபற்றி பேசுகையில், "இது பல ஆண்டுகளுக்கு நாம் பேசும் புயலாக இருக்கும். இது ஒரு வரலாற்று நிகழ்வு" என்றார். இந்த புயலினால் புளோரிடா மட்டும் அல்லாது தென்கிழக்கு மாநிலங்களான ஜார்ஜியா மற்றும் தென் கரோலினாவில் பல மில்லியன் மக்களை பாதிக்கும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Also Read | மணிக்கு 240 கிமீ வேகத்துல வீசிய புயல்.. சாலையில் சிக்கிய செய்தியாளர்.. போராடி மீண்ட திக் திக் வீடியோ..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தட்டி வீசிய புயல்.. மொத்த நாட்டுக்கும் கரண்ட் கட்.. எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சப்போ அதிகாரிகள் சொல்லிய பகீர் தகவல்..!
- இந்த வருஷத்தின் மிகப்பெரிய புயல்.. மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்துல காற்று வீசும்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்.. முழுவிபரம்..!
- 'எங்க' தடுப்பூசி 92% வேலை செய்யுது...! ஆனா கண்டிப்பா '3 டோஸ்' போட்டாகணும்...! - ரெண்டாவது கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய நாடு...!
- உருவானது 'யாஸ்' புயல்...! 'துறைமுகங்களில் 3-ம் எண் 'புயல் எச்சரிக்கை' கூண்டு...! - எந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு...?
- ‘புரெவி புயல் தமிழகத்தின் எந்தப் பகுதியில்?’... ‘டிசம்பர் 4-ம் தேதி கரையை கடக்கக் கூடும்’.. ‘வானிலை மையம் தகவல்’...!!!
- ‘வருது.. வருது.. விலகு.. விலகு!’.. 120 கிமீ வேகத்தில் கரையை கடக்கவிருக்கும் நிவர் புயல்!.... ‘வானிலை மையம்’ ‘அலெர்ட்!’
- கடலூர்: ‘278 ஆபத்தான இடங்கள்’.. ‘180 ஜெனரேட்டர்கள்’.. Nivar புயலை எதிர்கொள்ள ‘முழுவீச்சில் தயாரான மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படை!’
- '4 வருஷத்துக்கு' அப்புறம் சென்னை, கடலோர மாவட்டங்களை குறிவைக்கும் ‘அடுத்த புயல்’ நிவார்!.. முன்பே ‘விடுக்கப்பட்டுள்ள’ அபாய எச்சரிக்கை!
- '2 நாளுக்கு யாரும் வெளியே வராதிங்க...' 'கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்...' '138 ஆண்டுகளுக்கு' பின் 'மும்பையை' தாக்கும் 'புயல்'...
- 'உருவானது 'நிசார்கா' புயல்...' 'இந்த மாதிரி புயல் உருவாகி 130 வருஷம் ஆச்சு...' இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் தகவல்...