குகையில் இருந்து ஒரே நேரத்துல பறந்த கோடிக்கணக்கான வௌவால்கள்.. பாத்தாலே மெர்சல் ஆகுதே.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மெக்சிகோவில் குகையில் இருந்து கோடிக்கணக்கான வௌவால்கள் ஒரே நேரத்தில் பறக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | சிவப்பு நிறத்துல மாறிய மேகம்.. பதைபதைத்துப்போன விமானி.. உலகையே ஸ்தம்பிக்க வச்ச சம்பவம்..!

இணையவசதி பெருகிவிட்டதன் பலனாக செல்போன்களின் பயன்படும் மக்களிடையே கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. இதுவே சமூக வலை தளங்களின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் மக்கள் உலக நடப்புகளை, நம்மை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான தகவல்களை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள முடிகிறது. இதனால் வினோதமான வீடியோக்களை பலரும் உலகம் முழுவதிலும் இருந்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இது நொடிப்பொழுதில் வைரலாகி விடுவதும் உண்டு.

அந்த வகையில் குகையில் இருந்து, கோடிக்கணக்கான வௌவால்கள் ஓரே நேரத்தில் பறந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

வைரல் வீடியோ

இந்த வீடியோவில் கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருக்கிறது. சாலையின் இடப்புறத்தில் இருக்கும் மலையில் இருந்து வௌவால்கள் எதிர்திசையில் பறக்கின்றன. சாலைக்கு குறுக்காக வௌவால்கள் பறப்பதை பார்த்து அந்த வாகனவொட்டி காரை அப்படியே நிறுத்திவிடுகிறார். இதனிடையே காரில் இருந்த ஒருவர் வௌவால்கள் பறப்பதை வீடியோ எடுக்கிறார். இந்த வீடியோவை இதுவரையில் 60 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், 169,000 லைக்ஸ்களை பெற்றுள்ளது இந்த வீடியோ. 

ஆராய்ச்சி

இதனிடையே சில காட்டு வௌவால்கள் ஒலிகளின் நீண்ட கால நினைவாற்றலைக் கொண்டிருப்பதாக சமீபத்தில் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. தவளை உண்ணும் வெளவால்கள் (டிராச்சோப்பின் சிரோசிஸ்) ஒலிகளுக்கு தொடர்ந்து எதிர்வினையாற்றியதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து பொலிவியா மற்றும் பிரேசில் வரை இந்த வௌவால்கள் வாழ்கின்றன. மேலும் அவை விளிம்பு உதடு வெளவால்கள் (fringe-lipped bats) என்றும் அழைக்கப்படுகின்றன. நடுத்தர அளவிலான இந்த வௌவால்கள் தவளைகள், பல்லிகள், பூச்சிகள், பழங்கள் மற்றும் பிற வெளவால்களை உண்ணும். ஆய்வின் ஒரு பகுதியாக இருந்த 49 வௌவால்களில் மைக்ரோசிப்களை ஆராய்ச்சியாளர்கள் பொருத்தி, அவற்றை காட்டுக்குள் விடுவித்தனர். இதுகுறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Also Read | போலியான வழக்குல 20 வருஷம் ஜெயில்.. வெளியே வந்து கல்யாணம் செஞ்ச நபர்.. அடுத்தநாளே பொண்டாட்டி கொடுத்த அதிர்ச்சி.. பாவம்யா மனுஷன்..!

MEXICO, BATS, RIVER OF BATS, CAVE, VIDEO SHOWING RIVER OF BATS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்