வீடியோ: '5 மீட்டர் தூரத்தில் இருந்தாலே தெரிஞ்சுடும்’... ‘காய்ச்சல் இருக்கா இல்லையானு’... ‘பிரத்யேக ஹெல்மெட் தயாரித்த நிறுவனம்’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காய்ச்சல் பாதித்தவர்களை கூட்டத்தில் எளிதில் கண்டறியும் வகையில், ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பிரத்யேக ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதலில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து இத்தாலியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் சாலையில் மக்கள் கடந்து செல்லும் பகுதியில், காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டறியும் வகையில் ரோந்து பணியில் இருக்கும் போலீசாருக்காக, ஷென்ஷென் (Shenzhen) பகுதியை சேர்ந்த குவான் ஜி (Kuang-chi) நிறுவனம் பிரத்யேக ஹெல்மெட்டை உருவாக்கி உள்ளது.

பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஹெல்மெட்டில் இன்பரா - ரெட் (infra red) கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இந்த கேமரா சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களின் உடம்புச்சூட்டினை எளிதாக கணக்கில் கொள்ளும். யாரேனும் காய்ச்சல் இருந்தால், அதாவது வழக்கமான உடலின் வெப்பநிலையை காட்டிலும் இருந்தால், அதுவும் அவர்கள் 5 மீட்டர் சுற்றளவில் இருந்தால் ஹெல்மெட்டில் ஒலி எழுப்பும். இதன் மூலம் கூட்டம் நிறைந்த பகுதிகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் போலீசார் இந்த ஹெல்மெட்டை அணிந்து ரோந்துப் பணியில் ஈடுபடுவதை பீப்பிள்ஸ் டெய்லி வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பலவாறாக கருத்துக்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

CLIMATE, POLICE, CORONAVIRUS, HELMET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்