அம்மாவின் கடைசி ஆசை.. இறுதி கணத்தில் நிறைவேற்றிய மகன்.. நெஞ்சை பிழியும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது அம்மாவின் இறுதி ஆசையை கடைசி கணத்தில் மகன் ஒருவர் நிறைவேற்றியிருக்கிறார். இந்த வீடியோ பலரையும் கலங்க வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | திடீர்னு பதவியை ராஜினாமா செய்த முகேஷ் அம்பானி.. புதிய தலைவராக ஆகாஷ் அம்பானி தேர்வு..!

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனீஷ் சரண். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் ஈடுபட்டு வரும் அவனீஷ், தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் சமூக மேம்பாடு, தன்னம்பிக்கை அளிக்கும் தகவல்களையும் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம். இதன் காரணமாகவே இவரை ட்விட்டர் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று பலரையும் கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது.

அம்மாவின் கடைசி ஆசை

ஸ்டெபானி நார்த்காட் எனும் பெண்மணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  நோய்வாய்ப்பட்டிருக்கிறார். இதனையடுத்து நார்த்காட்டை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு டெர்மினல் கேன்சர் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனால் பெரிதும் கவலையடைந்த அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்திருக்கின்றனர். அப்போது தனது மகனிடம் தன்னுடைய இறுதி ஆசையை கூறியுள்ளார் நார்த்காட். தனது மகன் பட்டம் பெறுவதை பார்க்கவேண்டும் என்பதே அவரது இறுதி ஆசை.

நெகிழவைத்த மகன்

இந்நிலையில், தனது தாயார் ஆசைப்பட்டபடியே படித்து டிகிரி வாங்கியிருக்கிறார் அவரது மகன் டால்டன். இதனை தனது தாயுடன் கொண்டாட நினைத்த அவர், மருத்துவமனை வளாகத்திலேயே சிறிய பட்டமளிப்பு விழாவை நடத்தியிருக்கிறார். இதில் தனது தாயை கலந்துகொள்ள செய்த டால்டன், பின்னர் அவரை அணைத்தபடி நடனம் ஆடினார். இந்நிலையில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண்,"அம்மாவுடைய கடைசி ஆசை" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை இதுவரையில் 90 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மேலும், இது நெட்டிசன்களை கலங்க வைத்திருக்கிறது. இந்த பதிவில்," என்னால் இந்த வீடியோவை முழுமையாக பார்க்க முடியவில்லை. அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறேன்" என்றும், "அன்னையின் பாசத்தை மிஞ்சியது இந்த உலகில் எதுவும் இல்லை" என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Also Read | 42 வயதில் சிறையில் இருந்தபடி 11 ஆம் வகுப்பு பரீட்சை எழுதிய பெண் கைதி.. மார்க்கை கேட்டா அசந்துபோய்டுவீங்க..!

 

SON, MOTHER, SON FULFILLING HIS MOTHER LAST WISH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்