பாக்கவே செம்மையா இருக்கே.. வானத்திலிருந்து தரையிறங்கும் வெள்ளை மயில்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இத்தாலி நாட்டில் ஒரு சிலையில் அமர்ந்திருக்கும் வெள்ளை மயில் தரைக்கு பறந்து வரும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

மயில்கள்

மயில்கள் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரத்யேக பறவையினம் ஆகும். ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்ததற்கு பிறகே மேற்க்கத்திய நாடுகளுக்கு மயில் பற்றிய அறிமுகம் கிடைத்ததாக கூறுவோரும் உண்டு. பொதுவாக நாம் காணும் மயில்களில் பச்சை, நீலம் உள்ளிட்ட வண்ணங்கள் நம்மை மயக்கும் வகையில் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கும். குட்டி போடும் என நினைத்து புத்தகங்களுக்கும் பொத்தி பொத்தி மயிலிறகை வளர்த்த அனுபவமும் நம்மில் பலருக்கு இருக்கலாம். இந்த வெள்ளை மயில்களும் அதேபோன்ற வாழ்க்கையை கொண்டவைதான் என்றாலும், இவை இனக்கலப்பு செய்யப்பட்டவை என்கிறார்கள் நிபுணர்கள்.

வனங்களில் வெள்ளை மயில்கள் வளர்வதற்கான வரலாறு கிடையாது. ஆகவே, மனிதர்களால் இனக்கலப்பு செய்யப்பட்டவையே வெள்ளை மயில்கள் என்ற கருத்தும் இருக்கிறது. இதில் ஆண் மயில்கள் சராசரியாக 39–45 அங்குல உயரமும் பெண் மயில்கள் 37-40 அங்குலம் உயரமும் வளரக்கூடியவை. பிறந்தது முதல் முழுமையாக வளர்ச்சி அடைய 3 வருடங்கள் எடுத்துக்கொள்கின்றன இந்த மயில்கள். வெள்ளை மயில்கள் லூசிசம் மரபணு மாற்றம் பெற்ற நீலமயில்களின் துணை இனமாகும். பிறக்கும் போது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மயில்கள் வளரும் போது வெள்ளை நிறமாக மாறுகின்றன.

வைரல் வீடியோ

தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கும் இந்த வீடியோவில் சிலையின் மீது அமர்ந்துள்ள ஒரு வெள்ளை மயில் அழகாக பறந்து புல்தரையில் வந்து நிற்கிறது. முழுவதும் வெண்மை நிறத்தில் இருக்கும் இந்த மயில் பறப்பது வானத்தில் இருந்து தேவதை பறந்து பூமிக்கு வருவதை போல இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இத்தாலியின் மாகியோர் ஏரியில் உள்ள போரோமியன் தீவுகளில் ஒன்றான, ஐசோலா பெல்லாவின் பூங்கா தோட்டத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் வண்ண மற்றும் வெள்ளை மயில்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றன.

சிலையில் இருந்து புல்தரைக்கு பறந்துவரும் இந்த வெள்ளை மயிலின் வீடியோவை 2.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பிரம்மிக்க வைக்கும் அழகுடன் மயில் நடந்து செல்லும் காட்சிக்கு நெட்டிசன்கள் ஹார்டின்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

 

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

 

WHITEPEACOCK, ITALY, VIRALVIDEO, வெள்ளைமயில், இத்தாலி, வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்