WATCH: மெதுவாக சாலையில் சென்றுகொண்டிருந்த கார்.. கண் இமைக்கும் நேரத்தில் தாக்கிய மின்னல்.. அதிர்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது மின்னல் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Kansas மாகாணம் Waverly பகுதியின் சாலையில் கார் ஒன்று சென்றுக்கொண்டு இருந்துள்ளது. அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால், வாகனங்கள் சற்று மெதுவாகவே சென்றுகொண்டு இருந்துள்ளன.

அந்த சமயம் திடீரென கார் ஒன்றின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் காரின் இயக்கம் உடனே நின்றுபோயுள்ளது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் வேகமாக சென்று காரைப் பார்த்துள்ளனர். காருக்குள் கைக்குழந்தையின் 5 பேர் இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இவை அனைத்தும் அந்த காரின் பின்னால் வந்த, மற்றொரு காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்