'வீடியோ கேம் பிரியர்களை எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

'வீடியோ கேமை தொடர்ச்சியாக விளையாடி வருவது, ஒரு வகையான மனநோய்' என்று உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சர்வதேச நோய்களின் வகைகளை, உலக சுகாதார நிறுவனம் இதுவரை 11 முறை பட்டியலிட்டுள்ளது. இதில் கடைசியாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் கேமிங் டிஸ்ஆர்டர் என்பது ஒரு நோய் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ICD-11 என்ற இந்தப் பட்டியல் சென்ற ஆண்டு ஜூன் மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது உலக சுகாதார சபையில் உறுப்பினர் நாடுகள் அறிந்துக்கொள்ளும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  2022-ம் ஆண்டு முதல் இது அமலுக்கு வர உள்ளது.

ஒருவர் வீடியோ கேம் விளையாடுவதால் மட்டுமே மனநோய் ஆகாது. ஆனால் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக வீடியோ கேம் மட்டுமே விளையாடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், நண்பர்கள், உறவினர்கள், படிப்பு, வேலை எல்லாவற்றையும் விட்டுவிட்டு வீடியோ கேமிலேயே மூழ்கிக் கிடப்பது மனநோய் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIDEOGAME, WHO, DISORDER

மற்ற செய்திகள்