உலகத்தின் மிக வயதான நபர்..கின்னஸ் நிர்வாகம் அளித்த அங்கீகாரம்.. வயசை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் வின்சென்ட் மோரா என்பவர் தான் தற்போது உலகில் வசிப்பவர்களிலேயே மிக அதிக வயதான நபராக அறிவித்திருக்கிறது கின்னஸ் அமைப்பு.

Advertising
>
Advertising

கின்னஸ்

உலகம் முழுவதும் நடைபெறும் சாதனை முயற்சிகளை கண்டறிந்து அவற்றை அங்கீகரித்து வருகிறது கின்னஸ் நிர்வாகம். அப்படி சாதனை புரிந்தவர்களுக்கு சான்றிதழை வழங்கும் இந்த அமைப்பு, அவர்களது பெயரை புகழ்பெற்ற கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெறச் செய்கிறது. பல்வேறு பிரிவுகளில் உலகிலேயே தனித்துவமாக இருப்பவர்களுக்கு , செயல்படுபவர்களை கவுரப்படுத்தும் விதமாக இதனை மேற்கொண்டுவருகிறது கின்னஸ் அமைப்பு. இதன் காரணமாகவே கின்னஸ் புத்தகம் உலகில் அதிகமாக படிக்கப்படும் புத்தகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

வயதான நபர்

வெனிசூலாவைச் சேர்ந்த ஜூவான் விசென்ட் மோரா (Juan vicente Mora) இன்று (மே 27) தனது 113 -வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வெனிசுலாவின் எல் கோப்ரே பகுதியில் 1909 ஆம் ஆண்டு பெரெஸ் மோரா மற்றும் எடெல்மிரா மோரா தம்பதியருக்கு 9வது குழந்தையாக பிறந்தார் ஜூவான் விசென்ட் மோரா. விவசாய குடும்பத்தை சேர்ந்த ஜுவான், தனது 34 வயதில் ஷெரிஃப்-ஆக பதவியேற்றார்.

உள்ளூரிலேயே கரும்பு மற்றும் காபி பயிரிட்டுவந்த ஜுவானின் குடும்பம், விவசாயத்தின் மீது அதிக பற்று கொண்டிருந்தது. ஆகவே, பின்னாளில் ஜூவானும் விவசாயத்தில் ஈடுபட்டார். தனது 104 வயது வரையிலும் விவசாய பணிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டுவந்த ஜுவான் அதன்பிறகு ஓய்வெடுக்க இருப்பதாக அறிவித்தார்.

திருமணம்

1937 ஆம் ஆண்டு எடியோஃபினா டெல் ரொசாரியோ கார்சியா என்னும் பெண்மணியை சந்தித்தார் ஜுவான். அவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மொத்தம் 11 குழந்தைகள் பிறந்தன. 1997 ஆம் ஆண்டு கார்சியா மரணமடைந்தார். தனது வாழ்வின் மிக மோசமான பகுதி அதுதான் என்கிறார் ஜுவான். தற்போது அவருக்கு 41 பேரப்பிள்ளைகள், 18 கொள்ளு பேரப்பிள்ளைகள், 12 எள்ளுப் பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர்.

அதிகமாக காபி குடிக்கும் வழக்கமுள்ள ஜுவான், குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடுவதையே அதிகம் விரும்புவதாக கூறுகிறார். இந்நிலையில் உலகத்திலேயே அதிக வயதான நபரான ஜுவானின் பிறந்தநாளை முன்னிட்டு உள்ளூர் மக்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்திவருகின்றனர்.

OLDESTMAN, GUINNESS, WORLDRECORD, வயதானநபர், கின்னஸ், சாதனை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்