Valentines Day க்கு முன்னாடியே ரோஸ், சாக்லேட், ப்ரொபோஸல் Dayனு எத்தனை இருக்கு..! களைகட்டும் காதலர் தினம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிப்ரவரி மாதம் தொடங்கி விட்டாலே அந்த மாதம் பலருக்கும் மிகவும் ஸ்பெஷல் ஆன மாதமாக இருக்கும். இதற்கு காரணம், பிப்ரவரி 14-ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் Valentines Day (காதலர் தினம்) கொண்டாடப்படுவது தான். இருவரிடையே உருவாகும் உன்னதமான உணர்வை அன்றைய தினத்தில் உலகமெங்கிலும் உள்ள ஜோடிகள் பலரும் விமரிசையாக கொண்டாடவும் செய்வார்கள்.

                            Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

தங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு ஏதாவது வித்தியாசமாக பரிசளிப்பது, இன்னொரு பக்கம் புதிதாக தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்காக பிப்ரவரி 14-ஆம் தேதியை தேர்வு செய்வது என பல்வேறு சம்பவங்கள் அந்த நாளை சுற்றி நிகழும்.

பொதுவாக அனைவருக்கும்மே பிப்ரவரி 14 என்றால் காதலர் தினம் என்பது தெரியும். ஆனால் அதே வேளையில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஏழு விதமான நாட்களை பலரும் கொண்டாடி வருவதும் மக்கள் மத்தியில் வைரலாக உள்ளது.

அதன்படி பிப்ரவரி 7ஆம் தேதி Rose Day என கொண்டாடப்படுகிறது. அதாவது இந்த நாளில் தங்கள் மனதுக்கு பிடித்தமான நபருக்கு ரோஜா பூவை ஒரு பரிசாக கொடுப்பது தான். இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 8 ஆம் தேதி Proposal Day என அறியப்படுகிறது. ஏற்கனவே காதலிக்கும் நபரிடம் திருமணம் குறித்த ப்ரபோஸல் ஆகவோ அல்லது தங்கள் மனதிற்கு விருப்பமாக இருக்கும் ஒரு நபரிடம் முதன் முறையாக தங்களது காதலை ப்ரபோஸ் செய்யவோ இந்த நாளை பலரும் தேர்வு செய்வார்கள்.

இதற்கடுத்து வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி, Chocolate Day என கொண்டாடப்படும் சூழலில் தங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு பல வெரைட்டி சாக்லேட்டுகளை வாங்கி பரிசளிப்பது இந்த நாளில் வாடிக்கையாக உள்ளது.

Images are subject to © copyright to their respective owners

இதன் பின்னர், பிப்ரவரி 10ஆம் தேதி Teddy Day -ம், பிப்ரவரி 11 ஆம் தேதி Promise Day என்றும் கருதப்படுகிறது. இந்த நாளில் தங்களுக்கு பிடித்தமானவரிடம் ஒரு உறுதிமொழியாக சத்தியத்தை பலரும் கொடுப்பார்கள். இப்படி முதல் சில நாட்கள் காதலுக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் சூழலில் இதற்கடுத்து வரும் நாட்கள் மிக நெருக்கமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

அதாவது பிப்ரவரி 12 ஆம் Hug Day என்றும், பிப்ரவரி 13 ஆம் தேதி Kiss Day என்றும் குறிப்பிடப்படும் சூழலில் இதற்கடுத்து பிப்ரவரி 14 ஆம் தேதி Valentines Day உலகெங்கிலும் உள்ளவர்களால் கொண்டாடப்படுகிறது. இப்படி காதலர் தினத்திற்கு முன்பு ஒரு காதல் உணர்வின் படிக்கட்டு போல ஒவ்வொரு நாளும் இருக்கும் சூழலில், நீண்ட காலமாக இது கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Images are subject to © copyright to their respective owners

ஒரு பக்கம் காதலர்களுக்கு இந்த நாள் மிகவும் ஸ்பெஷல் என்றாலும், மறுபக்கம் சிங்கிள்ஸ் அனைவரும் காதலர் தினம் குறித்த நிறைய மீம்களை பகிர்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், காதலர் தினம் உட்பட 2 நாட்களில், சாக்லேட், பரிசு, அது இது என செலவு அதிகம் இருப்பதால் இதற்கு காதலிக்காமல் எங்களை போல சிங்கிளாக இருக்கலாம் என்றும் பலரும் ஜாலியாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடுவதையும் இந்த பிப்ரவரி மாதத்தில் செய்வதை நாம் பார்த்திருப்போம்.

VALENTINES DAY, PROPOSE DAY, ROSE DAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்