‘சக பணியாளர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு ஊழியர்..’ 12 பேர் உயிரிழந்த பரிதாபம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் விர்ஜினியா கடற்கரைப் பகுதியில் அரசு ஊழியர் ஒருவர் சக பணியாளர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். 

விர்ஜினியா நகரின் கடற்கரைப் பகுதியிலுள்ள நகராட்சி அலுவலகத்துக்குள் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அங்கு பணியில் இருந்தவர்கள் மீது அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்த ஏராளமானவர்கள் சரிந்து விழுந்துள்ளனர். 

உடனே துப்பாக்கிச் சூடு பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸார் சம்பவ இடத்துக்கு வர, அவர்களை நோக்கியும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். தற்காப்புக்காக அவர்கள் திருப்பி சுட்டதில் அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த 12 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போலீஸார் உள்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் விர்ஜினியா நகராட்சி ஊழியர் என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பெயர், புகைப்படம் ஆகியவை வெளியிடப்படவில்லை.   

போலீஸ் தரப்பில் கூறுகையில், “அந்த நபர் தன்னுடைய நண்பர்கள், சக பணியாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறோம். அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் நடத்தப்பட்ட 150வது துப்பாக்கிச் சூடு இது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AMERICA, VIRGINIABEACHSHOOTING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்