'H-1B விசா' தடையில் திடீர் திருப்பம் - 'வெளிநாட்டு' திறமையாளர்களை வளைத்துப்போட டிரம்ப் 'புது பிளான்'!
முகப்பு > செய்திகள் > உலகம்வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரிவதை குறைக்கும் வகையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்ட H-1B விசா திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யவிருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் H-1B விசாவுக்கு தற்காலிக தடை விதித்தார். கொரோனாவால் தேக்கமடைந்த அமெரிக்க பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக, அமெரிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த தடை விதிக்கப்பட்டதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், அமெரிக்காவில் பணிபுரியும் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு வேலையிழக்கும் அபாயம் உருவானது.
இந்நிலையில், H-1B விசா திட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, மிகச்சிறந்த வெளிநாட்டு 'திறமையாளர்களை' மட்டும் அமெரிக்காவில் பணி அமர்த்த ட்ரம்ப் அரசு பரிசீலனை செய்து வருகிறது. மேலும், H-1B விசா பெற்றவர்களின் மனைவி / கணவன், அமெரிக்காவில் வேலைசெய்ய தடை விதிக்கவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவில் பயிலும் அனைத்து மாணவர்களும், தாங்கள் பட்டம் பெற்ற பின் 1 வருடத்திற்கு அங்கேயே வேலை செய்வதில் எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டிரம்ப்புக்கு 'செக்: ”நான் அதிபரானால், H-1B விசா தடையை நீக்குவேன்” - ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ‘ஜோ பிடன்’ அதிரடி!
- இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே?.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த நாடு!
- 'அமெரிக்கா என்ன எங்கள வேண்டாம்னு சொல்றது!? நாங்க வேற ப்ளான் பண்ணிட்டோம்!'.. இந்தியர்களின் அடுத்த 'வேலைவாய்ப்பு ஹாட்ஸ்பாட்' இது தான்!
- VIDEO: ‘8 வருஷமா குழந்தை இல்ல’.. கண்மூடித்தனமாக தாக்கிய கணவன்.. தடுத்த ‘செல்லநாய்’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!
- "50 பெண்களுக்கான சாதனை விருது!".. 'பட்டியலில்' கலக்கும் 5 'இந்திய' வம்சாவளி 'பெண்கள்'!.. 'யாருயா இவங்க?'
- 'ஒரே கடனுக்காக 2 முறை விண்ணப்பம்!'.. கொரோனா நிவாரண நிதியில் 6 லட்சம் டாலர்கள் சுருட்டிய இந்திய வம்சாவளி மருத்துவர்!
- 'டிரம்ப்' மனைவி 'மெலனியா...' 'ஹெச்-1பி' விசாவில் 'அமெரிக்கா வந்தவர்தான்...' 'ஓ...' 'இப்படி ஒரு கதை இருக்கா...'
- அத 'மனசுல' வச்சுக்கிட்டு தான்... ஹெச்-1 பி விசாவை 'தடை' பண்ணிருக்காரு... 'வரிந்து' கட்டும் எதிர்க்கட்சிகள்!
- "நாங்க இல்லனா உலகப் பொருளாதாரமே இல்ல!".. கொந்தளித்த ஐடி ஊழியர்கள்!.. ட்ரம்ப் அரசிற்கு சரமாரி கேள்வி!.. பூதாகரமான H-1B விசா விவகாரம்!
- ஹெச்-1 பி விசா: டிரம்பின் முடிவால் 'ஆடிப்போன' ஐடி துறை... கலங்கும் இந்தியர்கள்?